தனுஷ் என்றைக்கும் தலைவர் ஃபேன் தான்.. லால் சலாம் படத்துக்கு காலையிலேயே இப்படியொரு ட்வீட்!

சென்னை: தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பற்றியும் அவர் இயக்கத்தில் ஏன் நடிக்க மாட்டேன் என்பதையும் ரஜினிகாந்த் கூறியிருந்தார். தனது மனைவிக்கு நேரடியாக வாழ்த்து சொல்லவில்லை என்றாலும் தொடர்ந்து தான் ஒரு தலைவர் ஃபேன் என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கும் தனுஷ் தற்போதும் லால் சலாம் படத்துக்காக ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் முதல் முதலில் நடித்ததே அவரது கணவர் தனுஷ் தான். தனது மனைவியின் இயக்குநர் ஆசையை நிறைவேற்றி வைத்தார். தனுஷ், ஸ்ருதிஹாசன், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அனிருத் அறிமுகமானார்.

Dhanush again thumbs up tweet to Rajinikanths Lal Salaam release

பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட்: பள்ளிக் கால காதல் காட்சிகளும் படத்தில் அனிருத் இசையமைத்த “ஒய்திஸ் கொலவெறி” முதல் “கண்ணழகா” உள்ளிட்ட ஒட்டுமொத்த ஆல்பமே சூப்பர் ஹிட் அடித்தன. ஆனால், Beautiful Mind எனும் ஹாலிவுட் படத்தின் பாதிப்பு இந்த படத்தில் இருந்த நிலையில், அது சரியாக ரசிகர்களுக்கு கன்வே ஆகாத விதத்தில் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அடுத்த படத்திலும் தனுஷ்: மீண்டும் 2015ல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வை ராஜா வை எனும் படத்தை இயக்கினார். அந்த படத்தில் கெளதம் கார்த்திக் லீடு ரோலில் நடித்தார். ஆனால், இந்தமுறை அனிருத்துக்கு பதில் ஜி.வி. பிரகாஷை இசையமைப்பாளராக போட்டிருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். படத்தின் கிளைமேக்ஸில் கொக்கி குமார் கேரக்டரில் தனுஷ் கொடுத்த மாஸ் கேமியோவும் அந்த படத்தை காப்பாற்றவில்லை.

லால் சலாம் ரிலீஸ்: கணவர் தனுஷை பிரிந்து விட்ட நிலையில், மீண்டும் பல வருடங்கள் கழித்து படம் இயக்கி உள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்த படத்தில் முதலில் சின்ன கேமியோ ரோலில் கமிட்டான ரஜினிகாந்த் மகளுக்காக அதிக காட்சிகளில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லைகா தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ஆனால், பாடல்கள் எல்லாம் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. இந்நிலையில், இந்த படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது.

தனுஷ் வாழ்த்து: ஏற்கனவே லால் சலாம் படத்தின் டிரெய்லரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட தனுஷ் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படத்திற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், ”Lal Salaam From today !” என்கிற ட்வீட்டை போட்டு இன்று முதல் லால் சலாம் திரையரங்குகளில் வெளியாகிறது ரசிகர்கள் சென்று பாருங்கள் என பதிவிட்டுள்ளார். இன்று ஓடிடியில் வெளியாகி உள்ள தனது கேப்டன் மில்லர் படத்துக்கு கூட ட்வீட் போடாமல் லால் சலாம் படத்திற்கு தனுஷ் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மனைவியை மென்ஷன் பண்ணல: மறைமுகமாக தனுஷ் ஐஸ்வர்யாவுக்குத்தான் வாழ்த்து சொல்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். ஆனால், மனைவியை அவர் எங்கேயும் மென்ஷன் பண்ணல என்றும் அவர் ப்யூர் தலைவர் ஃபேன் அதனால் தான் இந்த ட்வீட் என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். விஷ்ணு விஷால், விக்ராந்த், தன்யா பாலகிருஷ்ணா, அனந்திகா, செந்தில், லிவிங்ஸ்டன், நிரோஷா, தம்பி ராமைய்யா மற்றும் ரஜினிகாந்த், கபில் தேவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள லால் சலாம் முதல் நாளில் வெற்றி வாகை சூடுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X