இரண்டு ஆளுமைகள் பங்கேற்ற தனுஷ்- ஐஸ்வர்யா திருமணம்

தனுஷ்- ஐஸ்வர்யா திருமணம் சர்ச்சையில் ஆரம்பித்தது, ஆனால் சுபமாக யாருமே எதிர்பாராத அளவுக்கு சிறப்பாக நடந்தது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலையிலேயே வந்து தாலி எடுத்துக்கொடுக்க திருமணம் நடந்தது. மாலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி கலந்துக்கொண்டார். இரண்டும் மகன்கள் உள்ள நிலையில் பிரிகின்றனர்.

 தனுஷ் - ஐஸ்வர்யா திருமணம்

தனுஷ் - ஐஸ்வர்யா திருமணம்

நடிகர் ரஜினிகாந்தின் மூத்தமகள் ஐஸ்வர்யா திருமணம் திடீரென தனுஷுடன் என முடிவானது. அப்போது சில பிரச்சினைகள் அவரது திருமணம் நடக்குமா என்கிற நிலைக்கு ரஜினி குடும்பத்தை தள்ளியது. அதே நேரம் ரஜினியின் நிலைப்பாட்டிலும் ஐஸ்வர்யா திருமணத்தை வைத்து சில மாற்றங்கள் ஏற்பட்டது.

 ஜெயலலிதாவுடன் கடும் மோதலில் இருந்த ரஜினி

ஜெயலலிதாவுடன் கடும் மோதலில் இருந்த ரஜினி

1991-96 காலக்கட்டத்தில் கடுமையாக ஜெயலலிதாவுடன் மோதலில் ஈடுபட்டிருந்த ரஜினி 1996 ஆம் ஆண்டு ஜெயலலிதா தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அதனால் ஜெயலலிதா கடும் கோபத்தில் இருந்தார். பின்னர் 98 லிம் அதிமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். அதன் பின்னர் ரஜினி வாய்ஸ் கொடுக்கவில்லை. ஒதுங்கியே ஒருந்தார். 2001 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். இம்முறை அவரும் நிதானப்பட்டிருந்தார்.

 ஜெயலலிதாவுடன் இணக்கமான ரஜினி

ஜெயலலிதாவுடன் இணக்கமான ரஜினி

இந்தக்காலக்கட்டத்தில் ரஜினியும் ஜெயலலிதா எதிர்ப்பை கைவிட்டிருந்தார். ஜெயலலிதாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் தைரிய லட்சுமி என வாழ்த்தியிருந்தார். இந்நிலையில் தனுஷ் ஐஸ்வர்யா திருமண ஏற்பாடுகள் நடந்தது. சசிகலா மூலம் ரஜினிகாந்த் ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்க அவரும் இறங்கி வந்து நட்புக்கரம் நீட்டினார். தனது மகள் திருமணத்திற்கு ரஜினி அழைப்பு விடுத்தார். இதன்மூலம் ரஜினி ஜெயலலிதா மோதல் முடிவுக்கு வந்தது.

 ஜெயலலிதா தாலி எடுத்துக்கொடுக்க நடந்த திருமணம்

ஜெயலலிதா தாலி எடுத்துக்கொடுக்க நடந்த திருமணம்

ஜெயலலிதாவை தனது குடும்பத்தின் மூத்த உறுப்பினர்போல் முகூர்த்தத்திற்கு ரஜினி அழைக்க அவர் வந்தி திருமணத்தாலியை எடுத்துக்கொடுக்க தனுஷ் தாலி கட்டினார். மாலையில் நடந்த ரிஷபஷனில் கருணாநிதி கலந்துக்கொண்டார். ஜெயலலிதா, கருணாநிதி இரு ஆளுமைகள் வாழ்த்த நடந்த திருமணம் முறிவில் முடிந்துள்ளது.

Recommended Video

Dhanush & Aishwarya Separation | Aishwarya போட்ட Tweet - இந்த பிரிவு தேவை | Filmibeat Tamil
சௌந்தர்யாவும் மணமுறிவுக்கு பின் மறுமணம் செய்துள்ளார்

சௌந்தர்யாவும் மணமுறிவுக்கு பின் மறுமணம் செய்துள்ளார்

18 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் இரண்டு பிள்ளைகள் இருவருக்கும் உள்ளனர். இந்நிலையில் இருவரும் பிரிவதாக அறிவுத்துள்ளது ரஜினி குடும்பத்தார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே சௌந்தர்யாவும் மணவிலக்கு பெற்று பின்னர் மறுமணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X