தீபாவளியில் தீர்ந்த வலி.. ரஜினி வீட்டில் மீட்டிங்?.. தனுஷ் - ஐஸ்வர்யா இணைவது உறுதி.. என்ன நடந்தது?
சென்னை: தனுஷ் நடிப்பில் கடைசியாக ராயன் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் அவரது 50ஆவது படமாகும். அதனை அவரே இயக்கவும் செய்திருந்தார். பெரும் எதிர்பார்ப்போடு வெளியான படத்துக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களையே கொடுத்தனர். அடுத்ததாக சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துவருகிறார் தனுஷ். இந்தப் படம் தவிர்த்து இளையராஜா பயோபிக், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், இட்லி கடை உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. சூழல் இப்படி இருக்க தனுஷ் - ஐஸ்வர்யா இப்போது பிரிந்திருக்கிறார்கள்.
இயக்குநரின் மகன் என்ற அடையாளத்தோடு அறிமுகமான தனுஷ் ஆரம்பத்தில் நிறைய கஷ்டங்களை சந்தித்தார். முக்கியமாக அவரது உருவத்தை வைத்து பலரும் கேலி செய்தார்கள். ஆனால் வெல்வதற்கு அழகைவிடவும் திறமை அதீத முக்கியம் என்பதை உணர்ந்து தனது திறமையை வளர்த்து இன்று தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கிறார். முக்கியமாக நடிப்பு மட்டுமின்றி இயக்கம், பாடல்கள் எழுதுவது, பாடுவது, திரைப்படங்கள் தயாரிப்பது என பல ப்ளாட்பார்ம்களில் ஜொலிக்கிறார் அவர்.

ராயன்: நடிகராக கலக்கிவந்த தனுஷ் பவர் பாண்டி படத்தில் இயக்குநராக அறிமுகமாகி வெற்றி கண்டார். அடுத்ததாக தனது 50ஆவது படமான ராயனை தானே இயக்கி நடித்தார். அதில் எஸ்ஜே சூர்யா, சந்தீப், காளிதாஸ் ஜெயராம், துஷாரா, அபர்ணா முரளி என ஏகப்பட்டோர் தனுஷுடன் நடித்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான ராயன் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. அரத பழசான கதையை சுமாரான திரைக்கதையுடன் பட்டி டிங்கரிங் பார்த்து கொடுத்ததால்தான் படம் படுத்துவிட்டது என்று ரசிகர்கள் கூறினார்கள்.
குபேரா: ராயன் படத்தை முடித்த தனுஷ் அடுத்ததாக சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துவருகிறார். வாத்தி படத்தை வைத்து தெலுங்கிலும் ஒரு ரவுண்டு வரலாம் என்று நினைத்திருந்த அவருக்கு அந்தப் படம் சொல்லிக்கொள்ளும்படி போகவில்லை. எனவே குபேரா படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் தெலுங்கின் முன்னணி நடிகரான நாகார்ஜுனாவும் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். மேலும் இட்லி கடை என்ற படத்தை இயக்கவிருக்கும் அவர்; இப்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.
பிரிவு: இதற்கிடையே ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் தனுஷ். ஆனால் கடந்த சில வருடங்களாக பிரிந்திருக்கின்றனர். அதேசமயம் சமீபத்தில்கூட அவர்களது விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் அப்போது அவர்கள் இருவருமே ஆஜராகவில்லை. இரண்டு முறை அவர்கள் ஆஜராகாத சூழலில் நேற்று முன் தினம் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போதும் தனுஷும் ஐஸ்வர்யாவும் ஆஜராகவில்லை.
ரஜினி வீட்டில் நடந்த மீட்டிங்: மொத்தம் மூன்று முறை விவாகரத்து வழக்கு விசாரணைக்கு இருவரும் ஆஜராகவில்லை என்பதால் நிச்சயம் அவர்கள் இணைவது உறுதிதான் என்று ஆணித்தரமாக கூற ஆரம்பித்திருக்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி தீபாவளி பண்டிகைக்கு ரஜினிகாந்த்தின் வீட்டில் தனுஷும், ஐஸ்வர்யாவும் சந்தித்துக்கொண்டதாகவும்; அப்போது தனுஷிடம் ரஜினிகாந்த் மனம் விட்டு பேசியதாகவும் சொல்லப்படுகிறது.
விரைவில் செய்தி: மேலும் தனுஷும் தனது தரப்பு விஷயங்களை சொல்லிவிட்டு தாங்கள் இருவரும் மீண்டும் இணைவது உறுதி என்று ரஜினியிடம் வாக்கு கொடுத்திருப்பதாகவும்; அன்றைய தினம் தனுஷும் - ஐஸ்வர்யாவும் மகிழ்ச்சியோடு தீபாவளியை கொண்டாடியதாகவும் போயஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. இதனால் ரஜினிகாந்த்தும் செம ஹேப்பியாம். மேலும் இந்தத் தகவலை கேள்விப்பட்ட ரசிகர்களும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











