Dhanush Divorce:ரஜினிதான் பாவம்! இனி குட் நியூஸ்க்கு வாய்ப்பே இல்லை.. 27ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: நடிகர் தனுஷ் - இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கு கடந்த சில ஆண்டுகளாகவே குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இருவரும் விவாகரத்திற்கு விண்ணப்பித்திருந்தாலும் தங்களது குழந்தைகளான யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோரை கோ பேரண்டிங் முறையில் பார்த்து வருகின்றார்கள். இந்நிலையில் இவர்கள் இருவரும் இன்று அதாவது நவம்பர் 21ஆம் தேதி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள். இருதரப்பிலும் விசாரணை முழுமையாக முடிந்த நிலையில், வரும் 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் குடும்ப நல நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவருக்கும் இடையிலான அன்பும் நட்பும் தொடர்ந்து நீடிக்கும் எனவும் தெரிவித்திருந்தனர். குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், அவ்வப்போது, இருவரும் மீண்டும் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகி வந்தது.

dhanush aishwarya rajinikanth dhanush divorce

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ரஜினிகாந்த் என மூன்று பேரும் இணைந்து பேசி, மீண்டும் திருமண வாழ்வில் இணைந்து வாழ முடிவெடுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது. குறிப்பாக பலர் ரஜினி இதுதொடர்பாக பேசும்போது மிகவும் மனம் உடைந்து பேசியதாகவும் கூறினர். இந்தப் பேச்சுகள் ஒருபுறம் இருந்தாலும் சூப்பர் ஸ்டாரின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது, படத்தின் முதல் நாள் முதல் காட்சியை சென்னை ரோகிணி திரையரங்கில் பார்த்துவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

dhanush aishwarya rajinikanth dhanush divorce

உறுதி: இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜராகச் சொல்லி வாய்தா வழங்கப்பட்டது. ஆனால் இருவரும் படங்களில் பணியாற்றுவதில் மிகவும் பிசியாக இருந்ததால் கலந்து கொள்ளாமல் போனார்கள். இப்படியான நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜரான இருவரும், தாங்கள் பிரிந்து வாழ முடிவு செய்துவிட்டதாகவும், அதில் உறுதியாக இருப்பதாகவும், எனவே தங்களுக்கு விவாகரத்து தேவை என்றும் அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்கள்.

dhanush aishwarya rajinikanth dhanush divorce

தீர்ப்பு: இவர்களின் முடிவினைக் கேட்டுக் கொண்ட நீதிபதி வரும் 27ஆம் தேதி அதாவது அடுத்தவாரம், புதன் கிழமை இவர்களது விவாகரத்து வழக்கில் தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்தார். இந்த தீர்ப்பின்போது, தனுஷ் தரப்பில் இருந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த்க்கு ஜீவனாம்சம் எதாவது வழங்கப்படுமா என்பது குறித்து நீதிமன்றம் அறிவிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

dhanush aishwarya rajinikanth dhanush divorce

ரஜினிகாந்த்: இருவருமே விவாகரத்துக்கு சம்மதம் தெரிவித்துவிட்டதால் நீதிமன்றம் இவர்களுக்கு, விவாகரத்து வழங்கிவிடும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த விஷயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான் மிகவும் மனமுடைந்து காணப்படுகின்றார் எனவும் கூறிவருகின்றனர்.

dhanush aishwarya rajinikanth dhanush divorce

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X