தனுஷ்-ஐஸ்வர்யா மீண்டும் இணைகிறார்களா?..தந்தை சொன்ன சூசகத் தகவல்!

சென்னை : தனுஷ் ஐஸ்வர்யா மீண்டும் சேர்த்துவாழ இருப்பதாக தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா மறைமுகமாக கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கோலாகலமாக நடந்தது.

இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். 18 ஆண்டுகள் இணைபிரியாது வாழ்த்து வந்த இவர்கள் கடந்த ஜனவரி மாதம் பிரிந்தனர்.

தனுஷ், ஐஸ்வர்யா

தனுஷ், ஐஸ்வர்யா

தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது. இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம் என அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்தனர். இவர்களின் இந்த அறிவிப்பு ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.

வாழ்த்துக்கூட சொல்லவில்லை

வாழ்த்துக்கூட சொல்லவில்லை

இதையடுத்து, இருவரும் சேர்த்து வைக்க பலவிதமான முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதில் எதுவும் பலன் அளிக்காமல் போனது. மேலும், தனுஷின் பிறந்த நாளில் இருவரும் சேர்த்து வாழ இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், தனுஷின் பிறந்த நாளுக்கு ஐஸ்வர்யா வாழ்த்துக்கூட சொல்லவில்லை. இதனால், இவர்கள் இருவரும் இனி சேர்ந்து வாழவே வாய்ப்பு இல்லையே என ரசிகர்கள் ஆதங்கப்பட்டனர்.

கஸ்தூரி ராஜா

கஸ்தூரி ராஜா

இந்நிலையில், தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா அளித்துள்ள பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், இந்த பிரச்சினையில் இருந்து நான் விலகி இருக்கிறேன். தனது மகன்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் எடுக்கும் முடிவுகளில் தலையிடவோ அல்லது செல்வாக்கு செலுத்தவோ நான் விரும்பவில்லை.

நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

எங்கள் பிள்ளைகளின் ஆதரவு இல்லாவிட்டாலும் நானும் என் மனைவியும் நன்றாக வாழ முடியும். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களின் எதிர்பார்ப்பு. அவர்களின் மகிழ்ச்சிக்கு இடையூறாக இருக்கும் எதுவும் எங்களுக்கும் பிரச்சனைதான். அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் எங்களுக்கும் மகிழ்ச்சி தான். எது வேண்டுமானாலும் நடக்கலாம்..நல்லதே நடக்கும் என்று கஸ்தூரி ராஜா தனுஷ் ஐஸ்வர்யா சேர்வதை மறைமுகமாக உறுதிப்படுத்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X