இந்தியில் மீண்டும் தனுஷ்... அக்ஷய் குமாருடன் அசத்தல் காதல் கதை... ஹீரோயின் யார் தெரியுமில்ல?
சென்னை: ஆனந்த் எல் ராய் இயக்கும் ந்தி படத்தில் நடிகர் தனுஷ் மீண்டும் நடிக்க உள்ளார்.
தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் படம் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இதை துரை செந்திலுமார் இயக்கியுள்ளார்.
தனுஷூடன் சினேகா, மெஹ்ரின், நாசர், முனிஷ்காந்த், நவீன் சந்திரா, சதீஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். விவேக்- மெர்வின் இசை அமைத்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஹாலிவுட் நடிகர்
இதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார் தனுஷ். அவர் ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ வில்லனாக நடிக்கிறார். இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது.

கர்ணன்
அடுத்து, பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் படத்தில் நடித்துவருகிறார். இதன் ஷூட்டிங் திருநெல்வேலியில் நடந்துவருகிறது.

இந்தியில் நடிக்கிறார்
இதையடுத்து, அவர் இந்தி படத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர் ஏற்கனவே ஆனந்த் எல்.ராய் இயக்கிய ரான்ஜனா என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். பின்னர் அமிதாப்பச்சனுடன் ஷமிதாப் என்ற படத்திலும் நடித்திருந்தார்.

சாரா அலிகான்
இப்போது அவர் மீண்டும் இந்தி படத்தில் நடிக்க உள்ளார். இதையும் ஆனந்த் எல் ராய் இயக்குகிறார். இதில் சாரா அலிகான், தனுஷ் ஜோடியாக நடிக்கிறார். அக்ஷய்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இது காதல் கதையை கொண்ட படம். அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











