வாத்தி இசை வெளியீட்டு விழாவில் மகன்களுடன் ஆஜரான தனுஷ்... வேஷ்டி சட்டையில் சும்மா தாறுமாறு!

சென்னை: தனுஷ் நடித்துள்ள வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தனுஷுடன் சம்யுக்தா மேனன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள வாத்தி படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனது மகன்களுடன் தனுஷ் கலந்துகொண்ட புகைப்படங்கள் ட்ரெண்டாகி வருகின்றன.

 வாத்தி இசை வெளியீடு

வாத்தி இசை வெளியீடு

கோலிவுட்டில் பரபரப்பாக காணப்படும் நடிகர் தனுஷ், தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் நடித்து முடித்துள்ள வாத்தி திரைப்படம் வரும் 17ம் தேதி வெளியாகிறது. முன்னதாக இந்தப் படம் கடந்தாண்டு டிசம்பர் 2ம் தேதி ரிலீஸாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள வாத்தி படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள சாய்ராம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

 மகன்களுடன் ஆஜரான தனுஷ்

மகன்களுடன் ஆஜரான தனுஷ்

தனுஷுடன் சம்யுக்தா மேனன், சமுத்திரகனி நடித்துள்ள இந்தப் படம் தமிழில் வாத்தி எனவும், தெலுங்கில் சார் என்ற டைட்டிலிலும் ரிலீஸாகிறது. இதனிடையே நேற்று நடைபெற்ற வாத்தி இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் வெங்கி அட்லூரி, சம்யுக்தா மேனன் உள்ளிட்ட வாத்தி படக்குழுவினர் கலந்துகொண்டனர். முக்கியமாக படத்தின் ஹீரோ தனுஷ் தனது மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். யாத்ரா, லிங்கா இருவருக்கும் நடுவில் தனுஷ் அமர்ந்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகின.

 வேஷ்டி, சட்டை, முறுக்கு மீசை

வேஷ்டி, சட்டை, முறுக்கு மீசை

வாத்தி இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் வெள்ளை நிற பட்டு வேஷ்டி சட்டையில் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், முறுக்கு மீசையும் கொஞ்சம் நீளமாக முடி வளர்த்தும் செம்ம கெத்தாக வந்திருந்தார். கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வரும் தனுஷ், அதே கெட்டப்பில் தான் வாத்தி இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். இதனைப் பார்த்த ரசிகர்கள் தனுஷுக்கு உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர்.

 கதை சொன்னதே சாதனை தான்

கதை சொன்னதே சாதனை தான்

இந்நிலையில், வாத்தி இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் வெங்கி அட்லூரி, "இந்த கதையை தனுஷ் சாரிடம் சொல்கிறேன். அவ்வளவுதான் அதற்கு மேல் எனக்கு வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அவரிடம் கதை சொன்னதையே பெரிய சாதனையாக கருதுகிறேன். அவரிடம் முழு கதையையும் சொன்னபிறகு ஒன்றும் கூறாமல் கைகளை மட்டும் தட்டினார், பிறகு டேட்ஸ் எப்போது கொடுக்கட்டும் என தெலுங்கில் கேட்டார். அவர் தெலுங்கில் பேசியதை கேட்டு அதிர்ச்சியாகிவிட்டேன், அந்த தருணத்தை என்னால் என்றுமே மறக்க முடியாது" என நெகிழ்ச்சியாகக் கூறினார்.

 இரண்டு தேசிய விருதுகள்

இரண்டு தேசிய விருதுகள்

அவரை தொடர்ந்து பேசிய ஜிவி பிரகாஷ், "எனக்கும் தனுஷுக்கும் இடையில் யார் அதிர்ஷ்டசாலி என தெரியவில்லை. ஆனால், அவர் தேசிய விருது வாங்கிய 2 படங்களிலும் நான்தான் இசையமைப்பாளர் என நினைக்கும் போது பெருமையாக உணர்கிறேன். மேலும் அவருடன் மீண்டும் வாத்தி, கேப்டன் மில்லர் படங்களில் இணைந்ததில் மகிழ்ச்சி" என்றார். தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை 2011ம் ஆண்டு ஆடுகளம் படத்திற்காகவும் 2020ல் அசுரனுக்காகவும் பெற்றார். இந்த இரண்டு திரைப்படங்களிலும் இசையமைப்பாளராக பணியாற்றியது ஜி.வி. பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X