ரஜினிக்கு தெரியும் அந்த வலி.. ஐஸ்வர்யாவுக்கு தனுஷ் அதை செஞ்சாரு.. அதனால் பிரிஞ்சாங்க.. பிரபலம் ஓபன்

சென்னை: தனுஷும் ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்து இரண்டு மகன்களை பெற்றாலும்; சில வருடங்களுக்கு முன்பு அவர்கள் பிரிவை அறிவித்தார்கள். இதனையடுத்து குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனுவையும் தாக்கல் செய்து சட்டப்பூர்வமாக விவாகரத்தும் பெற்றார்கள். இப்படிப்பட்ட சூழலில் சமீபத்தில் தனது மகன் 12ஆம் வகுப்பை முடித்து பட்டம் வாங்கிய நிகழ்வில் இரண்டு பேரும் ஒன்றாக கலந்துகொண்டார்கள்.

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்தவர்கள் தனுஷும் ஐஸ்வர்யாவும். காதல் கொண்டேன் படத்தில் தனுஷின் நடிப்பை பார்த்து ஐஸ்வர்யா அவருக்கு பாராட்டு தெரிவித்தபோது ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அந்தக் காதலுக்கு முதலில் ரஜினியின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ஆனால் மகளின் காதலுக்காகவும், மனதுக்காகவும் தனுஷை தனது மருமகனாக ஏற்றுக்கொள்ள முடிவெடுத்து திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார் ரஜினி.

காதல் வாழ்க்கை: அவர்களுக்கு கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்தின்போது தனுஷ் வளர்ந்துவரும் நடிகர். இன்னும் சொல்லப்போனால் அப்போது அவர் பத்து படங்கள்கூட நடித்து முடிக்கவில்லை. எனவே தனுஷ் ரஜினி வீட்டு மருமகன் ஆனது பலருக்கு ஆச்சரியத்தையும் சிலருக்கும் பொறாமையையும் கொடுத்தது. இருந்தாலும் திருமணத்துக்கு பிறகு இருவரும் உச்சக்கட்ட காதலோடு வாழ்க்கையை நகர்த்திவந்தார்கள். யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்களையும் பெற்றுக்கொண்டார்கள்.

பிரிந்த தம்பதி: மேலும் ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்தார். சூழல் இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்பு இருவரும் தாங்கள் பிரிவதாக அறிவித்தனர். இந்த பிரிவுக்கு தனுஷ்தான் காரணம் என்று ஒருதரப்பினர் சொல்ல; இல்லை ஐஸ்வர்யாதான் காரணம் என்று ஒருதரப்பினர் கூறினார்கள். ஆனால் இருவரும் இதுவரை தங்களது பிரிவு பற்றிய அறிவிப்புக்கு பிறகு எந்தவிதமான பேச்சையும் பேசவில்லை. இதற்கிடையே அவர்களை இணைத்து வைக்க குடும்பத்தினரும் முயற்சி செய்தார்கள்.

சட்டப்பூர்வமான விவாகரத்து: அதேசமயம் தங்களது திருமணம் செல்லாது என்று அறிவிக்கக்கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. எனவே குடும்பத்தினரின் சமாதான முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை என பேசப்பட்டது. இதனையடுத்து நீதிமன்றத்தில் இரண்டு பேரும் ஆஜராகி தங்களக்கு விவாகரத்து வேண்டுமென்று உறுதியாக கூறினார்கள். அதனால் நீதிமன்றமும் அவர்கள் கேட்ட டைவர்ஸை கொடுத்தது.

Dhanush and Aishwarya are reportedly getting back together for their sons

மீண்டும் சேர்ந்த தனுஷ் - ஐஸ்வர்யா: சூழல் இப்படி இருக்க சமீபத்தில் அவர்களது மூத்த மகன் 12ஆம் வகுப்பு படிப்பை முடித்து பட்டம் வாங்கினார். அந்த நிகழ்வில் இரண்டு பேரும் சேர்ந்து கலந்துகொண்டார்கள். இதனையடுத்து இருவரும் மனம் மாறியதாகவும் கண்டிப்பாக சேர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் பேச்சுக்கள் கிளம்பின. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் திண்டுக்கல் வெங்கடேஷ் பேசியிருக்கிறார்.

வெங்கடேஷின் பேட்டி: அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "யாத்ராவால் மீண்டும் ஒரு நிகழ்ச்சியில் இரண்டு பேரும் கலந்துகொண்டார்கள். அதை பார்த்து ரஜினிக்கு ஏகப்பட்ட சந்தோஷம். கணவரை மகள் பிரிந்திருக்கும்போது பெத்தவருக்குத்தான் அந்த வலி தெரியும். ஆனால் இப்போது அவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. தனுஷின் வளர்ச்சியில் ஐஸ்வர்யாவுக்கு அதிக பங்கு உண்டு.

தனுஷும் வளர்ந்து ஹிட்டுகள் கொடுத்த பிறகு நிறைய பார்ட்டிகளுக்கு செல்ல ஆரம்பித்தார். அதனை ஐஸ்வர்யாவும் கேஷுவலாகத்தான் எடுத்துக்கொண்டார். ஒருமுறை தனுஷை வைத்து ஐஸ்வர்யா படம் இயக்க பிளான் போட்டிருந்தார். ஆனால் தனுஷால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. அது ஐஸ்வர்யாவுக்கு வருத்தத்தை உண்டு பண்ணியது. அந்த நேரத்தில் சில விஷயங்களும் சேர்ந்துகொண்டன. மேலும் சிலர் உள்ளே நுழைந்து இரண்டு பேருக்குமான விரிசலை பெரிதாக்கி; நன்றாக இருந்த குடும்பத்தை உடைத்துவிட்டார்கள். இப்போது மீண்டும் சேர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X