மீண்டும் சேரப்போவதை உறுதி செய்த தனுஷ் - ஐஸ்வர்யா?.. ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சி
சென்னை: காதலித்து திருமணம் செய்துகொண்ட தனுஷும், ஐஸ்வர்யாவும் இப்போது பிரிந்திருக்கிறார்கள். இருவரும் தற்போது தனித்தனியாக வாழ்ந்துவந்தாலும் முறைப்படி விவாகரத்து எதுவும் பெறவில்லை. எனவே அவர்கள் மீண்டும் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் இரண்டு பேரும் செய்திருக்கும் விஷயம் ஒன்று அவர்கள் இணைவதை உறுதியாக்கியிருப்பதாக ரசிகர்களை எண்ண வைத்திருக்கிறது.
காதல்கொண்டேன் படத்தில் தனுஷின் நடிப்பை பார்த்துவிட்டு அவரை பாராட்டினார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா. அப்போது அவர்கள் இரண்டு பேருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அவர்களது காதலுக்கு நீண்ட யோசனைக்கு பிறகு ரஜினி வீட்டில் சம்மதம் கிடைத்ததை அடுத்து இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களது காதலுக்கும், அன்யோன்யத்துக்கும் சாட்சியாக யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

ஃபுல் சப்போர்ட்: இரண்டு பேரின் திருமண வாழ்க்கையும் சுமூகமாகவே போய்க்கொண்டிருந்தது. ஐஸ்வர்யாவை தனுஷ் 3 படத்தில் இயக்குநராக அறிமுகமாக்கினார். அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். அதேபோல் அவரது இரண்டாவது படமான வை ராஜா வை படத்தில் கெஸ்ட் ரோலிலும் நடித்திருந்தார் தனுஷ். அதேபோல் தனுஷின் நடை, உடை, பாவனைகள் என அனைத்தும் மாறுவதற்கு ஐஸ்வர்யா பக்கபலமாக இருந்தார். இப்படி இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக நின்றார்கள்.
திடீர் பிரிவு: சூழல் இப்படி இருக்க நாங்கள் இரண்டு பேரும் தனித்தனி வழிகளில் பயணப்படப்போகிறோம் என்று சில வருடங்களுக்கு முன்பு சொல்லி தங்களது பிரிவை அறிவித்தார்கள். அவர்களது பிரிவுக்கு யூகங்களாக பல காரணங்களை பலரும் சொன்னார்கள். ஆனால் பிரிவு என்பது அவர்களது தனிப்பட்ட முடிவு என்பதால் அதில் ஓரளவுதான் தலையிட வேண்டும். இதற்கிடையே இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் அவர்களுக்காக இரண்டு பேரும் சேர வேண்டும் என்ற அக்கறை பேச்சுக்களும் எழுந்தன.
பேச்சுவார்த்தை?: தனுஷையும், ஐஸ்வர்யாவையும் மீண்டும் சேர்த்துவிட வேண்டுமென்று இரண்டு குடும்பத்தினரும் முயன்றுவருகிறார்களாம். குறிப்பாக அவர்கள் இரண்டு பேரும் மகன்களுக்காக சேர்வதுதான் எதிர்காலத்துக்கு நல்லது என்று ரஜினி முழு மூச்சாக நினைக்கிறார். இதன் காரணமாக அவரும் நேரடியாகவே இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும்; ஆரம்பத்தில் அதில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று கூறப்பட்டது.
உறுதி செய்த இருவர்: இதனையடுத்து இப்போது அவர்களது மனதில் மாற்றங்கள் வந்திருக்கிறதாகவும்; விரைவில் இரண்டு பேரும் இணைவார்கள். ரஜினிக்கு அடுத்த வருடம் நடக்கும் ஒருவிழா அதற்கான ஆர்மபமாக இருக்கும் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் தனுஷ்- ஐஸ்வர்யாவின் விவாகரத்து வழக்கு நேற்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால் இரண்டு பேருமே நேரில் ஆஜராகவில்லை. எனவே அக்டோபர் 19ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
இதனை கவனித்த ரசிகர்களோ, உண்மையில் விவாகரத்து பெற்றே ஆக வேண்டும் என்று இருவரும் நினைத்திருந்தால் ஆஜராகியிருக்கலாமே. ஒருவேளை அவர்களுக்குள் நடந்த சமாதான பேச்சுவார்த்தை ஒர்க் அவுட் ஆகிவிட்டதோ. நேரில் ஆஜராகாமல் தாங்கள் மீண்டும் இணைகிறோம் என்பதை மௌனமாக உறுதி செய்திருக்கிறார்கள் என்று மகிழ்ச்சியுடன் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











