தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து.. டைவர்ஸுக்கு பிறகு மகன்கள் யாருடன் இருப்பார்கள்?.. என்ன ஆகும் தெரியுமா?

சென்னை: கோலிவுட்டில் சமீபகாலமாக செலிபிரிட்டிகளின் விவாகரத்து அதிகரித்திருக்கிறது. அந்த லிஸ்ட்டில் பெரும் அதிர்ச்சி கொடுத்த ஜோடிகளில் ஒன்றுதான் தனுஷ் - ஐஸ்வர்யா. இருவரும் காதலித்து கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக ஒன்றாக வாழ்ந்த அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க தங்களுக்கு விவாகரத்து வேண்டுமென்று குடும்ப நல நீதிமன்றத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா மனுத்தாக்கல் செய்திருக்கிறார்கள்.

காதல் கொண்டேன் படத்தில் தனுஷின் நடிப்பை பார்த்து பாராட்டும்போது ஏற்பட்ட பழக்கம் அவருடன் ஐஸ்வர்யாவுக்கு காதலை ஏற்படுத்தியது. பிறகு வீட்டு சம்மதத்துடன் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இருவருக்கும் யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக அவர்கள் இணைந்து காதலோடு தங்களது வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருந்தார்கள். ஒருவருக்கொருவர் அனுசரனையோடும் இருந்தார்கள்.

dhanush aishwarya rajinikanth

பிரிந்த இருவர்: சூழல் இப்படி இருக்க தாங்கள் பிரிந்து தனித்தனி வழியில் செல்ல முடிவு செய்திருப்பதாக சில வருடங்களுக்கு முன்பு அவர்கள் அறிவித்தார்கள். அது கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ரஜினி வீட்டில் இப்படி ஒரு சோகமா என்று பலரும் உச் கொட்டினார்கள். அதுமட்டுமின்றி ரஜினி வீட்டு மருமகனாக தனுஷ் இருப்பதற்கு என்னவொரு பிரச்னையோ என்று ஒருதரப்பினர் பேச ஆரம்பித்தனர். ஆனால் அதற்கு வேறு சில காரணங்கள் சொல்லப்பட்டன.

என்ன காரணம்?: அதாவது தனுஷ் குடும்பம் சினிமாவில் இருந்தாலும் மிடில் கிளாஸ் என்ற நிலையில்தான் இருந்தது. தனுஷ் வளர்ந்த பிறகுதான் அவரது குடும்பமும் மிடில் கிளாஸில் இருந்து வசதியான குடும்பம் என்ற நிலைக்கு நகர்ந்தது. ஆனால் ரஜினியின் குடும்பத்தை பொறுத்தவரை தனுஷ் குடும்பத்தை ஒரு படி கீழே வைத்துதான் பார்த்தது. அது தனுஷுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதுமட்டுமின்றி ஒருகட்டத்தில் தனுஷின் குடும்பத்தை சுத்தமாக மதிக்கவில்லை அதனால்தான் இந்த பிரிவு முடிவுக்கு தனுஷ் வந்ததாக சொன்னார்கள்.

முயற்சித்த குடும்பம்: நிலைமை இப்படி இருக்க இரண்டு பேரையும் எப்படியாவது மீண்டும் சேர்த்து வைத்துவிட வேண்டுமென்று ரஜினியின் குடும்பமும், தனுஷும் குடும்பமும் முயன்றதாக தெரிகிறது. அதற்கு முக்கிய காரணமே தனுஷ் - ஐஸ்வர்யாவின் இரண்டு மகன்கள்தான். இவ்வளவு வளர்ந்த பிறகு தங்களின் தாய் - தந்தை பிரிவு அவர்களை மன ரீதியாக பாதித்துவிடும். அதனால் சேர வேண்டும் என்று இரு குடும்பம் ஆசைப்பட்டதாக விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

நாளை தீர்ப்பு: ஆனால் சமீபத்தில் இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகி தங்களுக்கு விவாகரத்து வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறோம் என வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்பட்டது. நாளை அந்த வழக்கில் தீர்ப்பு வரவிருக்கிறது. அநேகமாக இருவருக்கும் விவாகரத்து என்றுதான் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூழல் இப்படி இருக்க ஒருவேளை விவாகரத்து உறுதியானால் யாத்ராவும், லிங்காவும் யாருடன் இருப்பார்கள் என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர்.

என்ன ஆகும்?: இந்நிலையில் அதுகுறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இப்போதுவரை யாத்ராவும், லிங்காவும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோருடன் நல்ல புரிதலிலும் உறவில்தான் இருக்கிறார்கள். தாய்க்கும், தந்தைக்கும் பிரச்னை என்றாலும் இருவருடனும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத்தான் செய்கிறார்கள். எனவே விவாகரத்து நடக்கும்பட்சத்தில் அவர்கள் தாயுடன் இருந்தாலும் தந்தை தனுஷை ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவிட மாட்டார்கள். தந்தையின் அரவணைப்பிலும் அவர்கள் வளர்வார்கள். முக்கியமாக தனுஷின் ஆலோசனையையும் அவர்கள் கேட்டு தங்களது வாழ்க்கையை வாழ்வார்கள். அதுமட்டுமின்றி தனுஷ் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொள்வார்கள். அதற்கு ஐஸ்வர்யாவும் முழு ஒத்துழைப்பு கொடுப்பார் என்று திரைத்துறையில் விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X