விவாகரத்துக்கு பின்.. தனுஷ் – ஐஸ்வர்யா வீட்டில் ரகசிய சந்திப்பு.. காரணம் என்ன ?

சென்னை : விவாகரத்து அறிவிப்புக்கு பின் நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவை ரகசியமாக சந்தித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Recommended Video

Dhanush | விவாகரத்துக்கு பின் Aishwarya வீட்டில் ரகசிய சந்திப்பு... *Celebrity | Filmibeat Tamil

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அனைவர் கண்படும் அளவிற்கு மனம்ஒத்த தம்பதிகளாக இருந்த இவர்கள் ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்துவிட்டு பிரிந்தனர். இது ரசிகர்களை மட்டுமல்லாது திரைப்பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

விவாகரத்து

விவாகரத்து

விவாகரத்து அறிவிக்குப்பின் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருமே சினிமாவில் படு பிஸியானார்கள். இருவரும் விவாகரத்து செய்து கொள்ளவில்லை பிரிந்து இருக்கிறார்கள். விரைவில் சேர்ந்து விடுவார்கள் என்று தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா கூறிய நிலையில், இருவரும் குழந்தைகளுக்காக சேர்ந்துவிடுவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தார். ரஜினிகாந்த் தனுஷிடம் பேச்சுவார்த்தை நடத்த அழைத்தபோதும் தனுஷ் அதை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

சந்தித்துக் கொள்ளவில்லை

சந்தித்துக் கொள்ளவில்லை

பிரிவு அறிவிப்புக்கு பின் ஐஸ்வர்யா பயணி என்ற ஆல்பம் பாடலை இயக்கி வெளியிட்டார். இந்த ஆல்பம் பாடலின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற போது, தனுஷ் மாறன் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் தங்கியிருந்தார். இருவரும் ஒரே ஓட்டலில் தங்கியபோதும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளவில்லை.

பெயரை மாற்றினார்

பெயரை மாற்றினார்

இதையடுத்து பயணி ஆல்பம் வெளியான போது தனுஷ், ஐஸ்வர்யாவை தோழி என்று கூறி வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதனால், கடுப்பான ஐஸ்வர்யா, ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா தனுஷ் என்ற பெயரை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்று மாற்றினார். இதனால், இவர்கள் இருவரும் இனி சேரவே வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்டு வந்தது.

ரகசிய சந்திப்பு

ரகசிய சந்திப்பு

இதையடுத்து, தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவும் ஒருவரை ஒருவர் ரகசியமாக சந்தித்துகொள்வதாக கிசுகிசு ஒன்று இணையத்தில் காட்டுத்தீ போல பரவிவருகிறது. அதாவது, விவாகரத்துக்கு முன் இருவரும் ஆரியபுரத்தில் உள்ள ஃபிளாட் ஒன்றில் வசித்து வந்துள்ளார்கள். அந்த வீட்டிற்கு தான், தற்போது இருவரும் அடிக்கடி சென்று வருவதாகவும், அந்த வீட்டின் வாசலில் இருக்கும் இருவரின் பெயர் கூட இன்னும் நீக்காமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுதான் காரணமா?

இதுதான் காரணமா?

விவாகரத்துப்பின் இருவரும் ஒரே வீட்டிற்கு சென்று வருவதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இருவர் இடையேவும் பேச்சுவார்த்தை நடக்கிறதா என்றும், குழந்தைகளுக்காக இருவரும் தங்கள் முடிவை மாற்றி இருக்கலாம் அதற்காக இருவரும் சந்தித்து பேசி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X