தனி வீடு.. தனுஷ் - ஐஸ்வர்யா நேரில் சந்திப்பு?.. இப்படியும் நடக்குதா?.. ரசிகர்கள் செம மகிழ்ச்சி
சென்னை: தனுஷும் ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்து இரண்டு மகன்களை பெற்றாலும்; சில வருடங்களுக்கு முன்பு அவர்கள் பிரிவை அறிவித்தார்கள். இதனையடுத்து குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனுவையும் தாக்கல் செய்தார்கள். ஆனால் சமீபத்தில் அந்த வழக்கு விசாரணைக்கு இரண்டு பேருமே ஆஜராகவில்லை. எனவே அவர்கள் இருவரும் விரைவில் ஒன்று சேரப்போகிறார்கள் என்று தகவல்கள் சிறகடிக்க ஆரம்பித்திருக்கின்றன. இந்தச் சூழலில் புதிய பேச்சு ஒன்று கோலிவுட்டில் எழ ஆரம்பித்திருக்கிறது.
தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்தவர்கள் தனுஷும் ஐஸ்வர்யாவும். காதல் கொண்டேன் படத்தில் தனுஷின் நடிப்பை பார்த்து ஐஸ்வர்யா அவருக்கு பாராட்டு தெரிவித்தபோது ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அந்தக் காதலுக்கு முதலில் ரஜினியின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ஆனால் மகளின் காதலுக்காகவும், மனதுக்காகவும் தனுஷை தனது மருமகனாக ஏற்றுக்கொள்ள முடிவெடுத்து திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார் ரஜினி.

காதல் வாழ்க்கை: அவர்களுக்கு கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்தின்போது தனுஷ் வளர்ந்துவரும் நடிகர். இன்னும் சொல்லப்போனால் அப்போது அவர் பத்து படங்கள்கூட நடித்து முடிக்கவில்லை. எனவே தனுஷ் ரஜினி வீட்டு மருமகன் ஆனது பலருக்கு ஆச்சரியத்தையும் சிலருக்கும் பொறாமையையும் கொடுத்தது. இருந்தாலும் திருமணத்துக்கு பிறகு இருவரும் உச்சக்கட்ட காதலோடு வாழ்க்கையை நகர்த்திவந்தார்கள். யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்களையும் பெற்றுக்கொண்டார்கள்.
பிரிந்த தம்பதி: மேலும் ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்தார். சூழல் இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்பு இருவரும் தாங்கள் பிரிவதாக அறிவித்தனர். இந்த பிரிவுக்கு தனுஷ்தான் காரணம் என்று ஒருதரப்பினர் சொல்ல; இல்லை ஐஸ்வர்யாதான் காரணம் என்று ஒருதரப்பினர் கூறினார்கள். ஆனால் இருவரும் இதுவரை தங்களது பிரிவு பற்றிய அறிவிப்புக்கு பிறகு எந்தவிதமான பேச்சையும் பேசவில்லை. இதற்கிடையே அவர்களை இணைத்து வைக்க குடும்பத்தினரும் முயற்சி செய்தார்கள்.
நீதிமன்றத்தில் வழக்கு: அதேசமயம் தங்களது திருமணம் செல்லாது என்று அறிவிக்கக்கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. எனவே குடும்பத்தினரின் சமாதான முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை என பேசப்பட்டது. சூழல் இப்படி இருக்க கடைசியாக இரண்டு முறை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வந்தபோது இருவருமே ஆஜராகவில்லை. எனவே அவர்கள் இருவரும் மீண்டும் இணைவது உறுதி என்று கோடம்பாகக்த்தில் பேச்சுக்கள் பலமாக எழுந்திருக்கின்றன.
சந்தித்துக்கொண்ட தனுஷ் - ஐஸ்வர்யா: இந்நிலையில் புதிய தகவல் ஒன்று இப்போது வெளியாகியிருக்கிறது. அதாவது இருவரும் சேர்ந்து இருந்தபோது வாங்கிய வீடு ஒன்றில் அவர்கள் இப்போது அடிக்கடி சந்தித்துக்கொண்டு மனம் விட்டு பேசிவருவதாக கூறப்படுகிறது. அந்தச் சந்திப்பின்போது இனி தங்களுக்குள் எந்தவிதமான பிரச்னையும் வராமல் எப்படி பார்த்துக்கொள்வது என்று பல விஷயங்களை உரையாடியதாகவும்; தாங்கள் மீண்டும் இணைவதை அவர்களே அறிவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. அதேசமயம் இந்தத் தகவலில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது பற்றி தெரியவில்லை.
ரஜினியும் காரணம்: இதற்கிடையே இவர்கள் இருவரும் இணைய வேண்டுமென்பதில் ரஜினி மிகத்தீவிரமாக இருந்தார். பலமுறை இரண்டு பேரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி; மகன்கள் வளர்ந்துவிட்டார்கள் இப்போது பிரிந்து வாழ்வது என்பது அவர்களது வாழ்க்கைக்கும், மன நிம்மதிக்கும் சிக்கலாகிவிடும் என்று பல அட்வைஸ்களை செய்ததாகவும் ஒரு தகவல் ஓடியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











