இடியாப்ப சிக்கலாய் விவாகரத்து வழக்கு..3வது முறையாக எஸ்கேப் ஆன தனுஷ் - ஐஸ்வர்யா!
சென்னை: நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பிரிவதாக முடிவு செய்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இன்று இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தனுஷ், ஐஸ்வர்யா இருவருமே விசாரணைக்கு மூன்றாவது முறையாக விசாரணைக்கு ஆஜராகாததால் வழக்கு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
துள்ளுவதோ இளமை படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான தனுஷ், முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்து படத்தில் கமிட்டானார். தனுஷ் நடித்த காதல் கொண்டேன்,புதுப்பேட்டை, தேவதையைக்கண்டேன், திருடா திருடி என அவர் நடிப்பில் வெளியான அனைத்துப்படங்களும் வெற்றி பெற்றன. தேவதையைக் கண்டேன் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, தனுஷூக்கு பூங்கொத்து அனுப்பினார்.

தனுஷ், ஐஸ்வர்யா: இதைத்தொடர்ந்து இருவரும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறியது. இந்த விஷயம் அப்போது பத்திரிக்கையில் பேசுபொருளானதை அடுத்து, இவர்களின் காதல் விஷயத்தில் இருவரின் குடும்பத்தினரும் சேர்ந்து பேசி திருமணத்திற்கு ஏற்பாடு செய்னர். இதையடுத்து, 2004-ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி தனுஷ்-ஐஸ்வர்யா திருமணம் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த திருமணத்தில் பல முன்னணி நடிகர்,நடிகைகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
விவாகரத்து கோரி வழக்கு: தனுஷ், ஐஸ்வர்யா தம்பதிக்கு இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கடந்த 2022ம் ஆண்டு இருவரும் இருவரும் பிரிவதாக அறிக்கை வெளியிட்டு பிரிந்தனர். இவர்களின் பிரிவு நிரந்தரம் இல்லை இருவரும் விரைவில் சேர்ந்துவிடுவார்கள் பேசப்பட்டு வந்த நேரத்தில், இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மனு தாக்கல் செய்தனர்.
ஆஜராகவில்லை: இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 7ந் தேதி விசரணைக்கு வந்த நிலையில், அக்டோபர் 7ந் தேதி இருவரும் ஆஜராகாதால், வழக்கு விசாரணை அக்டோபர் 19ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் அன்றும் இருவரும் ஆஜராகாததால், நவம்பர் 2ந் தேதியான இன்று ஒத்திவைக்கப்பட்டது. இன்று குடும்ப நல நீதிமன்றத்தில் இவர்களின் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், மூன்றாவது முறையாக தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதையடுத்து, வழக்கின் விசாரணையை நீதிபதி சுபாதேவி நவம்பர் 21 ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்ட நீதிபதி, அடுத்த விசாரணைக்கு இருவரும் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











