Dhanush Son: விவாகரத்தான அப்பா, அம்மாவை ஒன்றாக ஹக் செய்ய வைத்த தனுஷ் மகன்.. பட்டமும் வாங்கிட்டாரே!

சென்னை: நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகள் தியா கல்லூரி படிப்பை முடித்து பட்டம் வாங்கிய புகைப்படங்களை நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். ஜோதிகாவின் அக்கா நக்மா தனது தங்கை மகள் பட்டம் வாங்கிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து சந்தோஷப்பட்டார். இந்நிலையில், நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரையும் ஒரே இடத்தில் ஒன்றாக சேர்த்துவிட்டார் அவரக்ளது மகன் யாத்ரா.

இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

Dhanush and Aishwarya Rajinikanth reunite for their son Yathra Convocation Function

2004ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்துக் கொண்ட தனுஷுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகள் நன்கு வளர்ந்து பெரியவர்களாக ஆன நிலையில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2022ம் ஆண்டு பிரிவதாக அறிவித்து விவாகரத்தும் பெற்றனர்.

தனுஷ் மகன் பட்டமளிப்பு விழா: சென்னையில் உள்ள அமெரிக்கன் இண்டர்நேஷனல் ஸ்கூலில் படித்து முடித்து விட்ட நடிகர் தனுஷின் மூத்த மகன் யாத்ராவுக்கு இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பட்டம் வாங்கிய தனுஷ் மகன் தனது தந்தை மற்றும் தாய் இருவரையும் ஒன்றாக அணைத்து கட்டிக் கொள்ளும் புகைப்படத்தை தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

விவாகரத்துக்குப் பிறகு: தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் 2022ம் ஆண்டு விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்ததில் இருந்தே சேர்ந்து தென்படவில்லை. ஆனால், இரண்டு மகன்களும் அம்மாவுடனும் அப்பாவுடனும் அனைத்து இடங்களுக்கும் சென்று வரும் காட்சிகள் வெளியாகிக் கொண்டுதான் இருந்தன. இந்நிலையில், விவாகரத்துக்குப் பிறகு இருவரையும் இப்படி ஒரே இடத்தில் ஒன்றாக சேர்ந்த பெருமை யாத்ராவுக்குத்தான் சேரும்.

ஈகோ இல்லாமல்: எந்தவொரு சண்டையும் போட்டுக் கொள்ளாமல் பரஸ்பரம் பிரிந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சோஷியல் மீடியாவில் தேவையற்ற சர்ச்சைகளை கிளப்பவில்லை. மேலும், எந்தவொரு ஈகோவும் இல்லாமல், தனது மகனின் சந்தோஷம் தான் முக்கியம் என இருவரும் இணைந்து வந்து அதுவும் ஒரே இடத்தில் ஒன்றாக கட்டிப்பிடித்து நிற்பதை பார்க்கவே சந்தோஷமாக உள்ளது என தனுஷ் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் ரசிகர்கள் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிட்டு வருகின்றனர்.

நாளை ஆடியோ லாஞ்ச்: சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா நடித்துள்ள குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நாளை பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் என்ன லுக்கில் வருவார் என காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இன்றே அவரது தரிசனம் கிடைத்து விட்டது. சூர்யா மகள் தியா ஒரு பக்கம் பட்டம் வென்று தாய் தந்தையை பெருமைப்படுத்திய நிலையில், தனுஷும் பட்டம் பெற்று தனது பெற்றோரை பெருமைப்படுத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X