Dhanush - Aishwarya: மகனின் கான்வகேஷன்.. சிரித்த முகத்தோடு அருகருகே தனுஷ் ஐஸ்வர்யா இருக்கும் வீடியோ!
சென்னை: நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தம்பதிகளாக இருந்து, விவாகரத்து பெற்றவர்கள். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் முதல் மகனான யாத்ரா தனது பள்ளிப் படிப்பை நிறைவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர்களது பள்ளியில் நடைபெற்ற கான்வகேஷன் நடைபெற்றுள்ளது. இதில் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர். தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் யாத்ரா என மூவரும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள ரஜினிகாந்த் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருந்தார்கள். தற்போது வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.
இயக்குநர் மற்றும் நடிகர் செல்வராகவனின் தம்பி நடிகர் தனுஷ். தனுஷை தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் செய்து வைத்ததே அவரது அண்ணன் செல்வராகவன் தான். காதல் கொண்டேன் படத்தின் மூலம் தனுஷ் கதாநாயகனாக அறிமுகமானார். இவரும் சூப்பர் ஸ்டாரின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பின்னர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குநராக உருவெடுத்தார். இவரது இயக்கத்தில் முதலில் வெளியான படமான 3 படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்தது மட்டும் இல்லாமல் இன்றைக்கு இசை உலகை கலக்கிக் கொண்டு உள்ள அனிருத்தை அறிமுகப்படுத்தியது ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தான். அதன் பின்னர் உருவான வை ராஜா வை படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்தார் தனுஷ்.
இவர்களது திருமண வாழ்க்கை நன்றாக சென்றுகொண்டு இருந்தது. முதலில் யாத்ரா என்ற மகன் பிறந்தார். அதன் பின்னர் லிங்கா என இளைய மகன் பிறந்தார். இளைய மகனின் பெயரில் தாத்தா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் படமே நடித்தார். கடந்த ஆண்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

நேற்று மாலையில் இருந்து அதாவது மே 31 ஆம் தேதி மாலையில் இருந்து இணையத்திலும் கோலிவுட் வட்டாரத்திலும் வேகமாக பரவி வரும் புகைப்படம் என்றால் அது தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என இருவரும் தங்கள் மகன் யாத்ராவின் கான்கவகேஷனில் கலந்து கொண்டுள்ளனர். இருவரையும் யாத்ரா ஒருசேர கட்டிப்பிடிக்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், "எனது பேரன் கடந்த முதல் மைல்கல், வாழ்த்துகள் யாத்ரா கண்ணா" என்று பதிவிட்டிருந்தார்.
மீண்டும் இல்லற வாழ்க்கை:இவரது இந்த பதிவைப் பார்த்த இணையவாசிகள் விவாகரத்து பெற்ற தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை தனது பள்ளி கான்வகேஷனில் ஒன்று சேர்த்துவிட்ட பேரன், அவர்களை வாழ்க்கையிலும் ஒன்று சேர்த்துவிடுவார் என்ற நம்பிக்கை ரஜினிகாந்த்திற்கு வந்துவிட்டது போல என்று பேசி வருகிறார்கள்.

வீடியோ: இந்த பேச்சுக்கு ஏற்றதை போல, தற்போது இணையத்தில் வேகமாக பரவி வரும் வீடியோவில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அருகருகே நின்று கொண்டு சிரித்த முகத்துடனும் பூரிப்புடனும் பெருமையுடனும் நின்று கொண்டு உள்ளார்கள். இவர்களுக்கு நடுவே அவர்களின் இளைய மகன் லிங்கா உள்ளார். அதேபோல் கான்வகேஷனில் சான்றிதழ் வாங்குவதற்கு முன்னர் யாத்ராவிற்கு அவரது தம்பி லிங்கா தான் மாலை அணிவிக்கிறார். இந்த வீடியோவை பார்த்தவர்கள் குழந்தைகளுக்காகவே விவாகரத்து பெற்ற தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் இணைந்து தம்பதிகளாக வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











