தனுஷ் மகன் பிறந்தநாள்..மேனரிஸம்லாம் அப்பா மாதிரியே.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் செய்தது சூப்பர்

சென்னை: ரஜினிகாந்த்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா; நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பத்து வருடங்களுக்கும் மேலாக சேர்ந்து வாழ்ந்த அவர்கள்; தங்களுக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக சில வருடங்களுக்கு முன்பு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டார்கள். தங்களது மகன்களை அவர்கள் கோ பேரண்ட்டிங் முறையில் வளர்த்துவருகிறார்கள். இந்நிலையில் அவர்களது இரண்டாவது மகன் லிங்கா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா. காதல் கொண்டேன் திரைப்படத்தில் தனுஷின் நடிப்பை பார்த்து பாராட்டும்போது அவர்கள் இரண்டு பேரும் முதன்முறையாக பழகினார்கள். அப்போதிருந்து சில காலம் நண்பர்களாக பழகிய அவர்கள்; காதலிக்கவும் செய்தார்கள். இந்தக் காதலுக்கு முதலில் ரஜினியின் வீட்டில் சம்மதம் கிடைக்கவில்லை. ஆனால் தான் செய்யும் காதலில் மகள் உறுதியாக இருப்பதை பார்த்து திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார் சூப்பர் ஸ்டார்.

Dhanush And Aishwarya Rajinikanth s Son Linga Turns 16 Fans Wish Him on Birthday
Photo Credit:

ஃபேவரைட் ஜோடி: திருமணத்துக்கு பின்பு தனுஷும் ஐஸ்வர்யாவும் கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாக வலம் வந்தார்கள். அவர்களுக்கு மொத்தம் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனுஷின் நடை, உடை, பாவனை என அத்தனையையும் ஐஸ்வர்யாதான் மாற்றி வைத்தார். தனுஷும் தன்னுடைய மனைவியின் இயக்குநர் ஆகும் ஆசைக்கு முட்டுக்கட்டை போடாமல் தன்னால் முடிந்த சப்போர்ட்டை செய்தார். அந்தவகையில் 3 படத்தை முதன்முறையாக இயக்கினார் ஐஸ்வர்யா.

Also Read
Nooru Sami Day 2 Box Office - நூறு சாமி 2வது நாள் வசூல் சூப்பர்.. பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம் கெத்துதான்
Nooru Sami Day 2 Box Office - நூறு சாமி 2வது நாள் வசூல் சூப்பர்.. பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம் கெத்துதான்

பிரிந்த ஜோடி: அப்படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. அதேசமயம் தனுஷின் நடிப்பு, அதில் பேசப்பட்டிருந்த பைபோலார் டிஸ் ஆர்டர் நோய் உள்ளிட்டவைகள் வரவேற்பை பெற்று விமர்சகர்களால் ஓரளவு கொண்டாடப்பட்டது. அந்தப் படத்துக்கு பிறகு கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், விவேக் உள்ளிட்டோரை வைத்து வை ராஜா வை படத்தை இயக்கினார். அதுவும் தோல்விதான். அப்படியே காலங்கள் ஓடிய சூழலில்; தனுஷும், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று சில வருடங்களுக்கு முன்பு பிரிந்துவிட்டார்கள்.

கோ பேரண்ட்டிங்: பிரிவுக்கு பிறகு அவர்கள் இரண்டு பேரும் வெவ்வேறு பாதைகளில் தங்கள் கரியரில் பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள். மகன்களை அவர்கள் கோ பேரண்ட்டிங் முறையில் வளர்த்துவருகிறார்கள். மகன்களும் தந்தை, தாயின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து ஒத்துழைப்பு வழங்கிவருகிறார்கள். அவர்கள் வளர்ந்து பக்குவம் அடைந்துவிட்டதால் பெரிய பிரச்னை எதுவும் இல்லாமல் அவர்கள் நகர்ந்துவருகிறார்கள்.

இன்று பிறந்தநாள்: இந்நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதிக்கு இரண்டாவதாக பிறந்த லிங்கா இன்று தனது 16வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி ஐஸ்வர்யா தனது மகனை அழைத்துக்கொண்டு திருவண்ணாமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது நடந்து வந்த லிங்காவை பார்த்த அங்கிருந்தவர்கள், அப்படியே அப்பா மேனரிஸத்தை உரித்து வைத்திருக்கிறார் என சொல்லி பிறந்தநாள் வாழ்த்துகளை கூறிவருகிறார்கள். அதுமட்டுமின்றி தனுஷின் ரசிகர்களும் தங்களது வாழ்த்தினை கூறிவருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X