அண்ணன் வழியில் தனுஷ்?.. தங்கை வழியில் ஐஸ்வர்யா?.. இரண்டாவது திருமணம் நடக்குமா?

சென்னை: தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் சட்டப்பூர்வமாக விவாகரத்து வழங்கியிருக்கிறது நீதிமன்றம். இந்த விவாகரத்தை தனுஷ் ரசிகர்களில் ஒருதரப்பினர் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் அவரும், ஐஸ்வர்யாவும் விரைவில் சேர்ந்துவிடுவார்கள் என்று கடந்த சில மாதங்களாக தகவல்கள் தொடர்ந்து பரவிவந்தன. எனவே இந்த விவாகரத்து அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் சூழலில் தனுஷுக்கு இரண்டாவது திருமணம் நடக்குமா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர்.

தனுஷும் ஐஸ்வர்யாவும் தங்களுக்கு சட்டப்பூர்வமாக விவாகரத்து வேண்டுமென்று குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்கள். அந்த மனு மீதான முதல் இரண்டு விசாரணையில் இருவருமே ஆஜராகவில்லை. இதன் காரணமாக அவர்கள் விவாகரத்து முடிவிலிருந்து பின் வாங்கிவிட்டார்கள். கண்டிப்பாக அவர்கள் மீண்டும் இணைந்துவிடுவார்கள்; ஆழ்வார்பேட்டையில் அவர்கள் வாங்கியிருக்கும் வீட்டில்தான் இருவரும் இனி இருப்பார்கள் என பேசப்பட்டது.

dhanush aishwarya

ரஜினி 50: அதுமட்டுமின்றி அடுத்த வருடத்துடன் ரஜினிகாந்த் சினிமாவுக்கு வந்து ஐம்பது வருடங்கள் நிறைவடைகின்றன. எனவே அதற்கு ஒரு விழா எடுக்கப்படவிருப்பதாகவும்; அந்த விழாதான் தனுஷும், ஐஸ்வர்யாவும் மீண்டும் இணையப்போவதற்கான முதல் புள்ளி என்றும் கூறப்பட்டது. மேலும் ரஜினிகாந்த்தின் உடல்நிலையை காரணம் காட்டி எப்படியாவது நீங்கள் சேர்ந்துவிட வேண்டுமென்று லதா வேண்டுகோள் வைத்ததாகவும் ஒரு தகவல் ஓடியது குறிப்பிடத்தக்கது.

சட்டப்பூர்வமான விவாகரத்து: சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு விவாகரத்து வழக்கு விசாரணைக்கு தனுஷும், ஐஸ்வர்யாவும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதனையடுத்து நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்; இருவரும் மனம் ஒத்து பிரிவதால் அவர்களுக்கு விவாகரத்து உறுதியாகியிருக்கிறது என்று உத்தரவிட்டது. இதனால் கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து நடந்திருக்கிறது. இரண்டு பேரும் 2004ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள்; அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற மகன்கள் இருக்கிறார்கள்.

தொடர் விவாகரத்து: இதற்கிடையே தனுஷின் அண்ணனும் இயக்குநருமான செல்வராகவனும் நடிகை சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களது திருமண வாழ்க்கையும் பாதியில் முடிந்தது. அதனையடுத்து தன்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கீதாஞ்சலி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் செல்வா. அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். அதேபோல் ரஜினியின் இளைய மகளான சௌந்தர்யாவும் முதல் திருமணத்திலிருந்து வெளியேறி இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இப்படி ரஜினியின் குடும்பத்திலும், தனுஷின் குடும்பத்திலும் விவாகரத்துகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.

இரண்டாவது திருமணம்: இந்நிலையில் செல்வராகவன் மற்றும் சௌந்தர்யா போன்று தனுஷும், ஐஸ்வர்யாவும் இன்னொரு திருமணம் செய்துகொள்வார்களா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பிவருகின்றார்கள். சூழல் இப்படி இருக்க ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது தனுஷுக்கு செல்வராகவன் போன்றே இரண்டாவது திருமணம் செய்து வைக்க அவரது தந்தை கஸ்தூரி ராஜா முடிவு செய்திருப்பதாகவும்; தங்களது உறவுக்கார பெண் ஒருவரைத்தான் தனுஷுக்கு இரண்டாம் மணம் முடித்து வைப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் தன்னுடைய இளைய மகளின் வாழ்க்கை இப்போது சுமூகமாக போய்க்கொண்டிருக்கிறது. மூத்த மகளின் வாழ்க்கையை நினைத்துதான் ரஜினியும், லதாவும் ரொம்பவே வருத்தப்படுகிறார்கள். எனவே ஐஸ்வர்யா இன்னொருவரை விரும்பினால் அவரை கட்டி வைக்கவோ அல்லது தாங்களே ஒரு பையனை பார்த்து இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிவில் இருப்பதாகத்தான் கூறுகிறார்கள் விவரமறிந்தவர்கள். ஆக, அண்ணன் வழியில் தனுஷும், தங்கை வழியில் ஐஸ்வர்யாவும் வாழ்க்கையின் அடுத்தக்கட்டங்களுக்கு நகர்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X