ஒருவழியா இட்லி கடை ஷூட்டிங்கை முடித்த தனுஷ்.. அருண் விஜய்யுடன் செம போஸ்.. நித்யா மேனனை காணோமே!
சென்னை: தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இட்லி கடை திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமானது. அதன் பின்னர் அக்டோபர் 1ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாக டான் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
நடிகர் தனுஷின் எந்த ஒரு படத்துக்கும் ஒத்துழைப்பு கொடுக்கக் கூடாது என்றும் அவர் தன்னிடம் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு படம் நடிக்காமல் ஏமாற்றி வருகிறார் என 5 ஸ்டார் கதிர் வழக்கு தொடுத்த நிலையில், இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு தாமதம் ஆனதாக கூறப்பட்டது.

நடிகர் தனுஷ் அந்த கேப்பை பயன்படுத்திக் கொண்டு அவர் நடித்து வரும் இந்தி படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வந்தார். இந்நிலையில், தற்போது இட்லி கடை படத்தின் படப்பிடிப்பையும் வெற்றிகரமாக முடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
அஜித் உடன் மோதல் தவிர்ப்பு: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியானது. முன்னதாக அந்த படத்துடன் போட்டி போடுவதாக தனுஷ் தனது இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதியை ஏப்ரல் 10 என அறிவித்தார். ஆனால், அதன் பின்னர் இட்லி கடை படத்தின் படப்பிடிப்பை சுற்றி சில பிரச்சனைகள் எழுந்த நிலையில், அதன் ரிலீஸ் தேதி அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இட்லி கடை சூட்டிங் ஓவர்: நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்து விட்டதாக நடிகர் அருண் விஜய் மற்றும் படக்குழுவினருடன் தனுஷ் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தற்போது தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் வெளியிட்டு அறிவித்துள்ளது.
நித்தியா மேனன் எங்கே?: இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடித்து வருகிறார். ஆனால், இன்று வெளியான புகைப்படத்தில் அவரை காணோமே என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இட்லி கடை படத்தில் அவருக்கான போர்ஷனை ஏற்கனவே தனுஷ் எடுத்து முடித்து விட்டார் என்றும் நித்யா மேனன் போர்ஷன் முழுக்க முழுக்க பிளாஷ்பேக் போர்ஷன் ஆக இடம் பெற வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறுகின்றனர்.
பாக்சிங் கதை: இட்லி கடையில் ஆரம்பித்து அருண் விஜய் உடனான பாக்ஸிங் கதையில் படம் பயணிக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி வெளியாகும் இட்லி கடை திரைப்படம் தனுஷுக்கு மிகப் பெரிய வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து சொதப்பல்: கடந்த ஆண்டு தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன் பின்னர் தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் விமர்சன ரீதியாக சொதப்பிய நிலையில், இந்த ஆண்டு அவர் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் பெரிதாக ஓடவில்லை. இந்நிலையில், தனுஷுக்கு கம்பேக் படமாக குபேரா மற்றும் இட்லி கடை படங்கள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித்தை இயக்குகிறாரா?: நடிகர் தனுஷ் அடுத்ததாக அஜித் குமாரை வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குட் பேட் அக்லி படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜித் குமாரின் அடுத்த படத்தை தயாரிக்க பல பெரிய நிறுவனங்களும் இயக்குநர்களும் போட்டி போட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தனுஷ் இயக்கத்தில் அஜித்குமார் நடித்தால் சிறப்பான சம்பவமாக இருக்கும் என்று சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











