Dhanush: ஷூட்டிங்கில் பாபா பாஸ்கர் மாஸ்டரை மிரட்டும் தனுஷ்.. என்ன நடந்துச்சு? வீடியோ ட்ரெண்ட்!
சென்னை: நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் அடையாளம் என்பதைவிடவும் இந்திய சினிமாவின் அடையாளம் எனக் குறிப்பிடுவதுதான் சரியாக இருக்கும். நடிகராக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய தனுஷ், அதன் பின்னர், பாடகர், பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர் என ஒரு முழுக் கலைஞனாக வளர்ந்துள்ளார். இதுவரை இவரது நடிப்பில் 50 படங்கள் வந்துள்ளது. இதில் தனது 50வது படத்தினை தானே இயக்கி நடிக்கவும் செய்தார். இதுவரை இவரது இயக்கத்தில் 2 படங்கள் வெளிவந்துள்ளது. அடுத்ததாக இவரது இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் வெளியாகவுள்ளது. இட்லி கடை படம் உருவாகி வருகின்றது. இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் தனுஷ், நடன இயக்குநர் பாபா பாஸ்கர் மாஸ்டரை மிரட்டுவது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே கூறியதைப்போல் நடிகர் தனுஷ் தனது 50வது படமான ராயன் படத்தினை தானே இயக்கி நடித்தார். இந்தப் படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றிப் படமாக மாறியது. இதற்காக படத்தின் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர், கலாநிதி மாறன், நடிகர் தனுஷ்க்கு ஒரு காசோலையும், இயக்குநர் தனுஷ்க்கு ஒரு காசோலையும் வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் என்றால் அது குபேராதான். இந்தப் படம் நேரடி தமிழ் படமாகவும் நேரடி தெலுங்குப் படமாகவும் வெளிவரவுள்ளதாக கூறப்படுகின்றது. படத்தின் போஸ்டர் வெளியானதில் இருந்து படத்தின் மீது ரசிகர்களுக்கு தனி ஆர்வமே ஏற்பட்டுள்ளது. படத்தில் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தினை சேகர் கம்முலா இயக்குகின்றார். படம் வரும் டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் பேச்சுகள் உலா வருகின்றது.

இயக்குநர்: தனுஷ் நடிப்பில் எந்த அளவுக்கு கவனம் செலுத்துகின்றாரோ, அதே அளவுக்கு இயக்கத்திலும் கவனம் செலுத்துகின்றார். இவரது இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள படம், 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படம்தான். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து படம் ரிலீஸ்க்கே தயாராக உள்ளது. நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் இருந்து வெளியாகியுள்ள 'கோல்டன் ஸ்பேரோ' பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் தனுஷ் நடிக்கவில்லை எனக் கூறப்படுகின்றது. இதற்கு முன்னர் தான் இயக்கிய இரண்டு படங்களிலும் தனுஷ் நடித்திருந்தார்.

இட்லி கடை: அதேபோல் தனுஷ் இயக்கத்தில் அடுத்து உருவாகிவரும் படம் இட்லி கடை. இந்தப் படத்தில் தனுஷ் உடன் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நடிகை நித்யா மேனன் நடிக்கின்றார். இந்தப் படத்திலும் தனுஷ் நடிக்கின்றார் என்பதை படக்குழு வெளியிட்ட முதல் அறிவிப்பிலேயே தெளிவுபடுத்திவிட்டது. இந்நிலையில் இட்லி கடை படத்தின் சுமார் 40 நிமிடங்கள் வரையிலான காட்சிகளைப் பார்த்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் படத்தினை பாராட்டியுள்ளார். இட்லி கடை படம் குறித்து பொதுவாகவே திரையுலகில் பல கேள்விகள் உலா வருகின்றது. நடிப்பு அசுரன் தனுஷ் மற்றும் நடிப்பு அரக்கி நித்யா மேனன் என இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவதாலே படத்தின் மீது பலருக்கும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
வீடியோ: இப்படியான நிலையில் இணையத்தில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகின்றது. அதாவது படப்பிடிப்புத் தளத்தில் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகின்றது. அதில் இயக்குநர் தனுஷ் மற்றும் நடன இயக்குநர் பாபா பாஸ்கர் மாஸ்டர் இருவரும் ரிகர்சல் பார்த்துக் கொண்டு உள்ளார்கள். அதில் தனுஷ் பாபா பாஸ்கர் மாஸ்டரை நோக்கி தனது விரலைக் காட்டி மிரட்டுவதுபோல் உள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இதனைப் பார்த்த பலரும் இந்த வீடியோ எந்தப் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











