தனுஷ் - ராம்குமார் இணையும் படத்தினை குறித்து வெளியான சுவாரசிய தகவல்!

சென்னை: நடிகர் தனுஷ் இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சமூக வலைத்தளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்கள் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு COMMON DP வெளியிட்டு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தனுஷின் வரவிருக்கும் படங்கள் குறித்தும் இன்று அப்டேட்டுகள் வரிசை கட்டி காத்து கிடக்கின்றன.

ரசிகர்கள் ஆர்வம்

ரசிகர்கள் ஆர்வம்

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று 11 மணிக்கு வெளிவரவுள்ளது. அதைத்தொடர்ந்து சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் தனுஷ் நடிக்கும் படம் குறித்தும் அப்டேட் வெளிவரும் என ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நீண்டுள்ள படவரிசை

நீண்டுள்ள படவரிசை

தனுஷின் நடிப்பில் Atrangi Re எனும் பாலிவுட் திரைப்படம் ரிலீசுக்கு காத்துள்ளது. The Gray Man படத்தின் இறுதிக்கட்டம் மீதமுள்ளது. தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதையடுத்து செல்வராகவன் இயக்கும் படம், சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் படம், சேகர் கம்முலா இயக்கும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்த உள்ளார் தனுஷ்.

மிகப்பெரிய வெற்றி

மிகப்பெரிய வெற்றி

2018ம் ஆண்டில் வெளியான மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக ராட்சசன் முதன்மை வகித்தது. தமிழ் சினிமாவிலும் முக்கிய படமாக கருதப்படுகிறது. இந்த படத்தை இயக்கிய ராம்குமார் தனுஷுடன் இணைந்து படம் பண்ணவுள்ளதாக கடந்த ஆண்டே தகவல்கள் வெளியாகின.

அதிகமாக மெனக்கெடல்

அதிகமாக மெனக்கெடல்

இந்த படத்தின் தலைப்பு வால் நட்சத்திரம் என முன்னரே சொல்லப்பட்டு வந்தது. தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்த படம் Sci Fi த்ரில்லர் எனவும், இதற்கு முன் நாம் கண்டிராத தனுஷை இதில் காண்போம் எனவும் சொல்லப்படுகிறது. திரைக்கதைக்கு ராட்சசன் படத்தை காட்டிலும் இதற்கு மூன்று மடங்கு மெனக்கெடல் அதிகமானதாக இருக்கும் எனவும் பேசப்படுகிறது. இந்த படம் குறித்த அப்டேட் ஏதும் இன்று வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X