10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜோடி சேரும் தனுஷ், ஹன்சிகா?

சென்னை : நடிகர் தனுஷ் இப்பொழுது கார்த்திக் நரேன் இயக்கத்தில் டி 43 படத்தில் நடித்து வருகிறார். இதை முடித்த கையோடு தெலுங்கில் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

நடிகை ஹன்சிகா மோத்வானி தன்னுடைய 50வது படத்தின் ரிலீஸுக்காக மும்மரமாக செயல்பட்டுக் கொண்டிருக்க சமீபத்தில் மிரட்டலான டீசர் வெளியாகி சக்கை போடு போட்டது.

தனுஷ் மற்றும் ஹன்சிகா இதற்கு முன்பு மாப்பிள்ளை என்ற படத்தில் இணைந்து நடித்திருக்க நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

வெற்றி பெற்றது

வெற்றி பெற்றது

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தை ரீமேக் செய்து 2011 ஆம் ஆண்டு தமிழில் அதே டைட்டிலுடன் வெளியான திரைப்படம் மாப்பிள்ளை. இந்த படத்தை இயக்குனர் சுராஜ் இயக்கி இருந்தார். தனுஷ் மற்றும் ஹன்சிகா மோத்வானி லீட் ரோலில் நடித்திருந்தனர். சூப்பர் ஹிட் படத்தை ரீமேக் செய்வதால் பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று 50 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி வெற்றி பெற்றது.

தனித்தனியாக ஹிட்

தனித்தனியாக ஹிட்

குழந்தை நட்சத்திரமாக சீரியல்களிலும் திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த ஹன்சிகா தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமான பின்பு தமிழ் முதல் முறையாக ஹீரோயினாக அறிமுகப்படுத்தப்பட்ட மாப்பிள்ளை படத்திற்கு பிறகு தனுஷுடன் இணைந்து எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்கவில்லை. இருவரும் தனித்தனியாக ஹிட் படங்களை கொடுத்து வந்தனர்.

50வது திரைப்படம்

50வது திரைப்படம்

இப்பொழுது தனுஷ் தன்னுடைய 43வது திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார். இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார் மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்து வருகிறார் . நடிகை ஹன்சிகா மோத்வானி தன்னுடைய 50வது திரைப்படம் மஹா வெளிவர மும்முரம் காட்டி வருகிறார். அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் சமீபத்தில் இதன் அட்டகாசமான டீசர் வெளியாகி சக்கை போடு போட்டது. சிம்பு சிறப்பு தோற்றத்தில் டீசர் முழுவதும் வந்து சென்றார் .

தனுஷுக்கு மூன்று ஜோடிகள்

தனுஷுக்கு மூன்று ஜோடிகள்

இந்த நிலையில் யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் தனுஷ் எழுதியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறது. மேலும் இப்படத்தில் தனுஷுக்கு மூன்று ஜோடிகள் இதில் ஒருவராக நடிகை ஹன்சிகா மோத்வானி நடிக்க உள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பு மாப்பிள்ளை படத்தில் இணைந்து நடித்த இந்த சூப்பர் ஜோடி மீண்டும் இணைய உள்ள செய்தி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. நித்யா மேனன் மற்றும் பிரியா பவானி சங்கர் இதர ஹீரோயின்கள் கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X