Tere Ishk Mein Box Office: காவிய காதலுக்கு அழிவே இல்லை.. உலகளவில் தனுஷ் படம் இத்தனை கோடி வசூலா?

மும்பை: ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ், கிருத்தி சனோன், பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான 'தேரே இஷ்க் மே' திரைப்படம் கடந்த நவம்பர் 28ம் தேதி வெளியானது. தமிழ்நாட்டில் தனுஷின் இந்த இந்தி படம் பெரிதாக வசூல் வேட்டை நடத்தவில்லை. ஆனால், இந்தியில் எதிர்பார்த்ததை போலவே 100 கோடி வசூலை இந்த படம் கடந்து அதற்கு மேலும், வசூல் குவித்து வருகிறது.

தேரே இஷ்க் மே படம் உலகளவில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'கலர் யெல்லோ மூவிஸ்' வெளியிட்டுள்ளது.

Dhanush and Kriti Sanon s Tere Ishk Mein Worldwide Official Box Office reports announced

முதலில் கிருத்தி சனோனின் சிங்கிள் போஸ்டருடன் பாக்ஸ் ஆபீஸ் அறிவிப்பு வெளியானது. உடனடியாக குபேரா திரைப்படம் நாகார்ஜுனாவுக்காக ஓடியது; இந்த படம் கிருத்தி சனோனுக்காக ஓடியது என்பதால் தான் தயாரிப்பு நிறுவனம் தனுஷ் போட்டோவை போடவில்லை என விமர்சனங்கள் கிளம்பின.

விமானத்தின் மீது கெத்தாக தனுஷ்: இந்நிலையில், அதை புரிந்துக் கொண்ட தயாரிப்பு நிறுவனம் விமானத்தின் மீது கெத்தாக தனுஷ் படுத்திருக்கும் போஸ்டருடன் உலகளவில் தேரே இஷ்க் மே இதுவரை 118.76 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. நடிகர் தனுஷ் இந்த ஆண்டு தெலுங்கில் குபேரா படத்தின் மூலம் ஒரு 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் படத்தையும் இந்தியில் தேரே இஷ்க் மே படம் மூலம் இன்னொரு 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் படத்தையும் கொடுத்துள்ளார்.

பெட்டில் கிருத்தி சனோன்: முன்னதாக தயாரிப்பு நிறுவனம் மருத்துவ பெட்டில் கிருத்தி சனோன் படுத்துக் கொண்டிருக்கும் ஸ்டில்லுடன் 118.76 கோடி வசூலை உலகளவில் தேரே இஷ்க் மே திரைப்படம் ஈட்டியதாக அறிவித்தனர். இந்த வாரம் பாலிவுட்டில் துரந்தர் திரைப்படம் அதிக தியேட்டர்களை ஆக்கிரமித்துள்ள நிலையில், இந்தியில் தேரே இஷ்க் மே வசூல் இந்த வாரம் எப்படி இருக்கும் என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும்.

200 கோடி சாத்தியமா?: தனுஷ், கிருத்தி சனோனின் காவிய காதல் படமாக வெளியான தேரே இஷ்க் மே படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை ரொம்பவே பக்க பலமாக இருந்தது. இந்த வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என 3 நாட்களும் கடந்த வாரத்தை போல தினமும் 15 முதல் 20 கோடி என இந்தியில் வசூல் செய்தால் கண்டிப்பாக 200 கோடியை தேரே இஷ்க் மே நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக 150 கோடி வசூல் கன்ஃபார்ம் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X