Don't Miss!
- News
ரொம்ப அரிதான நிகழ்வு.. "இந்த" தேதியில் இங்கெல்லாம் மழை கொட்டும்.. தமிழ்நாடு வெதர்மேன் தந்த வார்னிங்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Sports
ஹர்திக் பாண்டியா முன் காத்திருக்கும் சவால்..ஒரு தவறு செய்தால் மொத்தமாக குளோஸ்..பாடம் கற்பாரா கேப்டன்?
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
“மாறன்“ மாலை 5 மணிக்கு ஓடிடியில் ரிலீஸ்… படத்தை பார்க்க சுவாரசியமான 5 காரணம் !
சென்னை : தனுஷ் நடித்த மாறன் திரைப்படம் இன்று மாலை 5 மணிக்கு டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது.
தனுஷ், தனது 43 வது படமாக தற்போது மாறன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
இந்த திரைப்படத்தை பார்க்க சூப்பரான 5காரணத்தை பார்க்கலாம்...
ரஜினி சார் ஃபார்முலா.. கமல் சார் ஃபார்முலா- ன்னு சினிமால இரண்டு இருக்கு!

தனுஷ்
மாறன் படத்தை முதல் காரணமே தனுஷ் தான், அசுரன், கர்ணன் போன்ற மாஸ் திரைப்படங்களை கொடுத்த தனுஷுக்கு கார்த்திக் சுப்புராஜ் இயக்கி ஓடிடியில் வெளியான ஜகமே தந்திரம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத் தரவில்லை. இதனால், மாறன் திரைப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இயக்குநர் கார்த்திக் நாரேன்
இயக்குநர் கார்த்திக் நாரேன் துருவங்கள் 16 என்ற ஒரு வித்தியாசமான திரைப்படத்தை கொடுத்திருந்தார். அந்த படம் ஆரம்பம் முதல், முடிவு அனைத்தும் த்ரில்லிங், அடுத்து அருண் விஜய்யை வைத்து மாஸ் கேங்ஸ்டர் திரைப்படத்தை கொடுத்திருந்தார். தற்போது, மாறன் திரைப்படத்தை ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் கொடுத்துள்ளார்.

மாளவிகா
இந்த படத்தை பார்க்க முக்கியமான காரணமா மாளவிகா மோகனை நாம் சொல்லாம். மாஸ்டர் திரைப்படத்தில் அலுங்காமல் வந்துப்போன மாளவிகா பத்திரிக்கையாளராக மிரட்டிஉள்ளார். இந்த படத்தில் தாரா என்ற கதாபாத்திரத்தில் மாளவிகாக நடித்துள்ளார்.

முக்கிய நடிகர்கள்
மலையாள திரைக்கதை ஆசிரியர்கள் சர்பு, சுகாஸ் திரைக்கதைக்காக பணிபுரிகின்றனர். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் நடிகர் மகேந்திரன், அமீர் சுல்தான், சமுத்திரக்கனி, ஸ்முருதி வெங்கட் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கண்டு மகிழுங்கள்
நாளை சனிக்கிழமை என்பதால், இன்று வீக் எண்டு மைன்ட்டுக்கு வந்து இருப்பார்கள். ஸோ ஜாலியா இன்று மாலை 5 மணிக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் மாறன் திரைப்படத்தின் பிரத்யேகமாக காட்சி வெளியாகிறது. வீட்டிலிருந்தே குடும்பத்தோடு பார்த்துக் கொண்டாடுங்கள்.