கர்ணன் மாதிரியே இருக்கே ‘கர’.. இன்பநிதி கரத்தில் கர.. Faces of Kara வீடியோ வந்துடுச்சு பாருங்க!
சென்னை: போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'கர' வரும் ஏப்ரல் 30ம் தேதி வெளியாகிறது. ராம் சரணின் பெத்தி படமும் அதே நாளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது. தமிழில் தொடர்ந்து தனுஷ் நடித்து வரும் படங்கள் சொதப்பி வரும் நிலையில், அவருக்கு இங்கே 'கர' படம் கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அசோக் செல்வன், சரத்குமாரை வைத்து போர் தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'கர' படத்தில் நடித்துள்ள நடிகர்களின் முகங்களை அறிமுகப்படுத்தும் வீடியோவை சற்றுமுன் வேல்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஜெயராம், கருணாஸ், ப்ரித்வி, கே.எஸ். ரவிக்குமார், சுராஜ் வெஞ்சரமுடு, மமிதா பைஜு தோற்றம் எல்லாம் ரொம்பவே வித்தியாசமாகவும் அப்படியே ஊர்க்காரர்கள் போலவே உள்ளன. ஆனால், தனுஷின் லுக் மட்டும் கர்ணன் படத்தில் பார்த்ததை போலவே உள்ளது.
அசுரனில் வித்தியாசமான லுக்: நடிகர் தனுஷுக்கு அசுரன் படத்தில் வித்தியாசமான தோற்றத்தை வெற்றிமாறன் கொடுத்திருந்தார். வயதான கதாபாத்திரத்தை ஏற்று அதற்கு நீதி செய்யும் வகையில் தனுஷ் தனது தோற்றத்தை மாற்றி நடித்திருந்தார். ஆனால், கர படத்தில் மற்ற நடிகர்களின் கெட்டப் எல்லாம் புதுசாக உள்ள நிலையில், தனுஷ் லுக் மட்டும் அப்படியே கர்ணன் உள்ளிட்ட படங்களில் பார்த்தது போலவே உள்ளது என்கிற ஃபீலிங் வருகிறது.
இன்பநிதி கரத்தில் 'கர': இட்லி கடை படத்தை வெளியிட்ட இன்பநிதி தான் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் கர படத்தையும் வெளியிடுகிறார். இட்லி கடை, பராசக்தி படங்களை தொடர்ந்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடவுள்ள கர திரைப்படம் கண்டிப்பாக சொதப்பாது என்றும் இயக்குநர் விக்னேஷ் ராஜா கண்டிப்பாக தமிழில் தனுஷுக்கு கம்பேக் படத்தைக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மமிதா பைஜு நடிப்பு சிறப்பு: கிராமத்துப் பெண்ணாகவே மாறியுள்ளார் நம்ம டியூட் மமிதா பைஜு. கேப்டன் மில்லர் படத்தில் பிரியங்கா மோகனை நடிக்க வைத்து மொக்கை படுத்தியது போல இல்லாமல் மமிதா பைஜுவை சரியாக விக்னேஷ் ராஜா கையாண்டால் கண்டிப்பாக 'கர' கலெக்ஷனை அள்ளிவிடும் என்கின்றனர். படத்தில் நடித்துள்ள நடிகர்களின் தோற்றங்கள் அடங்கிய வீடியோவை பார்த்து ரசியுங்கள்.


Click it and Unblock the Notifications











