D55 படத்தில் 13 வருடங்களுக்கு பிறகு நடக்கும் விஷயம்.. தனுஷ், மம்மூட்டி ட்ரீம் கூட்டணி.. மேஜிக் செய்யுமா?
சென்னை: தனுஷ் இப்போது விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர படத்தில் நடித்து முடித்துவிட்டு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55ஆவது படமான D55 படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இவர்கள் மட்டுமின்றி மெகா ஸ்டார் மம்மூட்டியும் இதில் நடிக்கிறார். இந்நிலையில் 13 வருடங்களுக்கு பிறகு D55 படத்தில் படத்தில் நடந்திருக்கும் ஒரு விஷயம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் தனுஷ். கோலிவுட்டில் நிலைக்கவே மாட்டார் என பலரும் கூறியதை உடைத்து இப்போது ஹாலிவுட் வரை சென்றிருக்கிறார். கடந்த வருடத்தில் அவர் நடித்த மூன்று படங்களுமே சரியாக போகவில்லை. கடைசியாக திருச்சிற்றம்பலம் படத்தில் அவர் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றியை பார்த்தார். அதற்கு பிறகு நடித்த படங்களில் இட்லி கடை மட்டும்தான் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அதேசமயம் விமர்சன ரீதியாக அடி வாங்கியது.
எதிர்பார்ப்பில் தனுஷ்: இப்படி இரண்டு ஏரியாக்களிலும் தொடர்ந்து அடி வாங்குவதால் அதை சரி செய்ய வேண்டும் என்ற முனைப்பில் உழைக்க ஆரம்பித்திருக்கிறார். போர்த்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சமீபத்தில்தான் படத்திலிருந்து டைட்டில் டீசர் வெளியிடப்பட்டது. அதுவே படத்தின் மீது எதிர்பார்ப்பை பற்ற வைத்திருக்கிறது. இப்படம் நிச்சயம் வெற்றியடையும் என்ற நம்பிக்கையை வைத்திருக்கிறார்.

ராஜ்குமார் பெரியசாமியுடன்: தனுஷின் லைன் அப் ஸ்ட்ராங்காகவே இருக்கிறது. ஒன்று விட்டாலும் பின்னால் வருவது தாங்கும் படியாகத்தான் படங்களை கமிட் செய்து வைத்திருக்கிறார். கர படத்தை முடித்த அவர்; அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கிறார். இதில் அவருடன் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சூப்பர் சீனியர் முதல் இப்போதைய சென்சேஷனல் ஸ்ரீலீலா வரை நடிப்பதன் மூலம் இதன் காஸ்ட்டிங்கே ஆச்சரியத்தை உண்டாகியுள்ளது.
மெகா ஸ்டார் மம்மூட்டி: முக்கியமாக மம்மூட்டி நடிப்பது பெரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இத்தனை வருட கரியரில் தமிழில் ஒன்பது படங்கள் மட்டுமே நடித்திருக்கிறார். அவர் ஒரு தமிழ் படத்தில் நடிப்பதற்கு ஒத்துக்கொண்டார் என்றால் அந்தப் படத்தின் கதை ரொம்பவே ஸ்ட்ராங்காக இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம். எனவே நிச்சயமாக D55 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்ற எண்ணம் இப்போதே தோன்ற ஆரம்பித்துவிட்டது.
13 வருடங்களுக்கு பிறகு: அதிலும் தனுஷ், மம்மூட்டி ஆகிய இரண்டு பேருமே சிறந்த நடிகர்கள். தனியாக விட்டாலே நடிப்பில் அசால்ட்டாக ஸ்கோர் செய்யும் இருவரும் ஸ்க்ரீனில் எப்படி இருக்கப்போகிறார்கள் என்பதை பார்ப்பதற்கும் ரசிகர்களிடையே ஆர்வமாக இருக்கிறது. அதேபோல் 13 வருடங்களுக்கு முன்பு கம்மாத் & கம்மாத் என்ற மம்மூட்டி படத்தில் தனுஷ் கேமியோ செய்திருந்தார். இப்போது இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் தனுஷும், மம்மூட்டியும் இணைந்திருக்கிறார்கள். அதேபோல் சாய் பல்லவியும் சிறந்த நடிகை என்பது எல்லோரும் அறிந்தது. இப்படி மூன்று சிறந்த கலைஞர்களை ஒன்றிணைத்திருக்கும் ராஜ்குமார் பெரியசாமி நிச்சயம் கோலிவுட்டுக்கு தரமான படைப்பை கொடுக்கப்போகிறார் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications











