தனுஷ் – மாரி செல்வராஜ் இணையும் படம் கர்ணன் 2 வா ?
சென்னை : மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் படம் சமீபத்தில் ரிலீசாகி, பாக்ஸ் ஆபீசில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு தியேட்டர் உரிமையாளர்களுக்கு கைகொடுக்கும் வகையில் வசூலை பெற்ற படங்களில் கர்ணனும் ஒன்று.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, மீண்டும் ஒரு படத்தில் இதே கூட்டணி இணைய உள்ளதாக 2 நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்த தனுஷ், இந்த புதிய படத்தின் ப்ரீ புரொடெக்ஷன் பணிகள் நடந்து வருவதாகவும், அடுத்த ஆண்டு படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.

கர்ணன் சூட்டிங் போதே ஆலோசனை
லேட்டஸ்ட் தகவலின்படி, கர்ணன் படத்தின் சூட்டிங்கின் போதே, மற்றொரு படத்தில் இணைந்து பணியாற்ற தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் ஆலோசித்தனராம். தற்போது கர்ணன் படம் பிளாக்பஸ்டர் படமாகி விட்டதால், தங்கள் திட்டப்படி புதிய படத்தை துவங்க திட்டமிட்டுள்ளனராம்.

ஆரம்ப நிலையில் பணிகள்
இந்த படத்தின் பணிகள் ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதாக கூறப்படுகிறது. தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்தின் சூட்டிங்கிற்காக அமெரிக்கா சென்றுள்ளதால், புதிய படம் பற்றி இருவரும் ஃபோனில் பேசி உள்ளனர். தனுஷிற்காக மாரி செல்வராஜ் கதை ஒன்றை தயாரித்து வருகிறாராம்.

கர்ணன் இரண்டாம் பாகமா
இந்த படம் கர்ணன் படத்தின் இரண்டாம் பாகமாக இல்லாமல், புதிய கதையாக இருக்கும் என்கின்றனர். இந்த படத்திற்கான கதை தயாரானதும் ப்ரீ புரொடெக்ஷன் வேலைகளை துவங்க மாரி செல்வராஜ் திட்டமிட்டுள்ளார். ப்ரீ புரெடெக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போதே, துருவ் விக்ரமை வைத்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ள கபடி படத்தின் வேலைகளையும் கவனிக்க போகிறாராம் மாரி செல்வராஜ். இந்த படம் பற்றி ஜனவரியில் அறிவிப்பு வெளியானது.

தனுஷிற்காக காத்திருக்கும் டைரக்டர்கள்
தாங்கள் தற்போது பணியாற்றி வரும் வேலைகளை முடித்த பிறகு தனுஷும், மாரி செல்வராஜும் புதிய படத்தின் வேலைகளில் இறங்க உள்ளனராம். தனுஷ் வரிசையாக பல படங்களில் கமிட்டி ஆகி உள்ளார். ஹாலிவுட் படத்தை முடித்த பிறகு கார்த்திக் நரேக் இயக்கும் டி 43 படத்தில் நடிக்க உள்ளார். ராட்சசன் பட டைரக்டர் ராம்குமாருடன் தனுஷ் ஒரு படத்தில் பணியாற்ற உள்ளார்.


Click it and Unblock the Notifications











