விவாகரத்துக்குப் பிறகு சீதா ராமம் நடிகையுடன் டேட்டிங் செய்கிறாரா தனுஷ்?.. தீயாய் கிளம்பிய கிசுகிசு!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்துக் கொண்டு இரு ஆண் மகன்களை பெற்ற நடிகர் தனுஷ் பல வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த மனைவியை விவாகரத்து பெற்றுப் பிரிந்தார். கணவரை பிரிந்த பின்னர் மீண்டும் சினிமாவில் இயக்குநராக மாற வேண்டும் என லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய நிலையில், அந்த படம் அவருக்கு கைகொடுக்கவில்லை.
நடிகர் தனுஷ் நடிகராகவும் இயக்குநராகவும் தொடர்ந்து பிசியாக இருக்கிறார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் படு பிசியாக நடித்து வருகிறார். சேகர் கம்முலா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான குபேரா திரைப்படம் அவருக்கு தெலுங்கில் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்தது. ஆனால், தமிழில் பெரிதாக ஓடவில்லை.

அடுத்ததாக இட்லி கடை படம் அக்டோபர் மாதம் வெளியாக காத்திருக்கிறது. சமீபத்தில், ஏகப்பட்ட நடிகைகளுடன் தனுஷ் பார்ட்டி ஒன்றில் தென்பட்ட போது கூட சீதா ராமம் படத்தில் நடித்த நடிகை மிருணாள் தாகூர் உடனிருந்தார். இந்நிலையில், தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் டேட்டிங் செல்வதாக ஹாட் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்த நடிகைகள்: தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே ஏற்பட்ட சண்டை காரணமாக தனுஷ் குறித்து படுமோசமாக வெளிப்படையாக அறிவித்து லெட்டர் ஒன்றை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைவிட ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய விஷயம் என்னவென்றால் தனுஷ் உடன் இணைந்து நடித்த நஸ்ரியா, ஸ்ருதிஹாசன், பார்வதி உள்ளிட்ட பல நடிகைகள் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்து தனுஷுக்கு எதிராக திரும்பியது தான்.
ஏகப்பட்ட கிசுகிசு: எந்த சினிமா பிரபலம் தமிழ் சினிமாவில் விவாகரத்துப் பெற்றாலும் அதற்கு தனுஷ் தான் காரணம் என ஏகப்பட்ட கிசுகிசுக்கள் கிளம்ப ஆரம்பித்து விடுகின்றன. மேலும், மீம்களும் தனுஷை டார்கெட் செய்து பதிவிட்டு வருகின்றனர். தன்னை பற்றிய நெகட்டிவிட்டிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆடியோ லான்ச் விழாக்களில் மட்டும் தனுஷ் பேசி வருகிறார். குபேரா இசை வெளியீட்டு விழாவிலும் நெகட்டிவிட்டி குறித்து பேசியிருந்தார்.

மிருணாள் தாகூருடன் டேட்டிங்: தனுஷ் உடன் இதுவரை ஒரு படத்தில் கூட மிருணாள் தாகூர் இணைந்து நடிக்காத நிலையில், தற்போது தொடர்ந்து தனுஷ் உடன் மும்பையில் அடிக்கடி மிருணாள் தாகூர் சந்திப்பு நடத்தி வருகிறார் என்றும் இருவரும் ஒன்றாக சுற்றி வருகின்றனர் என பாலிவுட் மீடியாக்கள் போட்டோக்களுடன் கிசுகிசுக்களை எழுத ஆரம்பித்துள்ளன. மிருணாள் தாகூரின் பிறந்தநாள் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், அந்த பார்ட்டியில் கலந்துக் கொண்ட தனுஷ் கடந்த வாரம் வெளியான மிருணாள் தாகூரின் சன் ஆஃப் சர்தார் 2 படத்தின் ப்ரீமியர் காட்சியிலும் பங்கேற்றுள்ளாராம். மேலும், இட்லி கடை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் போட்டிருக்கிறார் மிருணாள் தாகூர்.
அப்துல் கலாம் படத்தில் நடிக்கிறாரா?: தனுஷ் - க்ரித்தி சனோன் உடன் இணைந்து தேரே இஷ்க் மெயின் படத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக அப்துல் கலாம் பயோபிக்கில் நடிக்க உள்ள நிலையில் அந்த படத்தில் மிருணாள் தாகூர் முக்கிய ரோலில் நடிக்க வாய்ப்புகள் இருக்குமா? என்றும் அதற்காகவே இருவரும் நெருங்கி பழகி வருகிறார்களா? என ஏகப்பட்ட ஊகங்கள் கிளம்பியுள்ளன. இதுதொடர்பாக தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் இதுவரை எந்தவொரு விளக்கமும் கொடுக்கவில்லை.


Click it and Unblock the Notifications











