Dhanush 2nd Marriage: சமந்தாவை தொடர்ந்து 2வது திருமணம் செய்யப் போகிறாரா தனுஷ்?.. காதலர் தினத்தில் கல்யாணமா?
சென்னை: கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி இதே போன்ற பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போது தான் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தாங்கள் பிரியப் போவதாக அறிவிப்பு ஒன்றை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு ஒட்டுமொத்த திரைத்துறையையும் ரசிகர்களையும் ஷாக் ஆக்கினர்.
விவாகரத்துக்காக நீதிமன்றத்தை 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாடிய தனுஷ் நவம்பர் 27, 2024ல் விவாகரத்தைப் பெற்றுவிட்டார். அதன் பின்னர் தான் நடிகை மிருணாள் தாகூர் உடன் தனுஷ் காதலில் விழுந்ததாக கிசுகிசுக்கள் கிளம்பின. ஆனால், இருவரும் அதை அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கவிலலி என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் தனுஷ் தன்னுடைய நல்ல நண்பர் மட்டுமே என மிருணாள் தாகூரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால், தற்போது வரும் காதலர் தினத்தில் தனுஷ் திருமணமே செய்துக் கொள்ளப் போவதாக பாலிவுட் திரையுலகில் தீ பரவி வருகிறது.
ரஜினி மகளை பிரிந்த தனுஷ்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக முடிவெடுத்த போதே அப்பா ரஜினிகாந்துக்கு அது பிடிக்கவில்லை. ஆனால், மகளுக்காக திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார் என அப்போதே பேச்சுக்கள் அடிபட்டன. தனது கணவர் தனுஷையும் கமல் மகள் ஸ்ருதிஹாசனையும் வைத்து 3 படத்தை இயக்கி ஐஸ்வர்யா இயக்குநர் ஆக அறிமுகமான போதே, ஏகப்பட்ட வதந்திகள் பரவியது. ஆனால், அதையெல்லாம் கடந்து 2 ஆண் குழந்தைகளை வளர்த்தெடுத்து வந்த நிலையில், 2022ம் ஆண்டு திடீரென தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவை அறிவித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மீண்டும் இயக்கம்: கணவரை பிரிந்த பின்னர் மீண்டும் இயக்கத்தில் பிசியாக மாறினார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஒரு ஆல்பம் பாடலை இயக்கினார். அதன் பின்னர், அப்பா ரஜினிகாந்தை வைத்து லால் சலாம் படத்தையும் இயக்கினார். ஆனால், அந்த படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இன்னொரு பக்கம் தனுஷ் ராயன், இட்லி கடை என படங்களை இயக்கியும் நடித்தும் வந்தார். அதை தாண்டி தெலுங்கில் குபேரா, இந்தியில் தேரே இஷ்க் மே என பான் இந்தியா அளவில் வெற்றிகளையும் குவித்தார். அவரது 'கர' திரைப்படத்தின் அறிவிப்பும் நேற்று வெளியாகி ரசிகர்களை ஹைப் ஆக்கி உள்ளது.
காதலர் தினத்தில் கல்யாணம்?: இந்நிலையில், தனுஷ் மற்றும் நடிகை மிருணாள் தாகூர் இருவரும் ரகசியமாக காதலித்து வருகிறார்கள் என்றும் வரும் பிப்ரவரி 14ம் தேதி தனுஷ் தனது 2வது திருமணத்தை செய்துக் கொள்ள ரெடியாகி விட்டார் என்றும் நெருங்கிய குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அந்த திருமணத்தில் பங்கேற்க போவதாக Free Press Journal, Gulte உள்ளிட்ட மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் சம்யுக்தா, சமந்தா உள்ளிட்ட நடிகைகள் 2வது திருமணம் செய்துக் கொண்ட நிலையில், தனுஷ் 2வது திருமணம் செய்துக் கொள்ளப் போகிறாரா? அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் வெளியிடுவாரா? என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











