தனுஷ் - மிருணாள் தாக்கூர் இணைவது உறுதி.. எல்லாம் பேசி முடிச்சாச்சு.. இனி அடுத்த கட்டம்தான்
சென்னை: சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் தனுஷ் இரண்டாவது திருமணம் செய்யவுள்ளார் என்றும், அதுவும் நடிகை மிருணாள் தாக்கூரைத்தான் இரண்டாவதாக திருமணம் செய்யவுள்ளார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டது. இப்படியான புரளியைக் கிளப்பியவர்கள் எங்கிருந்தோ எல்லாம் காரணங்களைத் தேடி தேடி பதிவிட்டு வந்தனர். ஒரு கட்டத்தில் அதற்கு மறுப்பு தெரிவிக்க வேண்டிய சூழல் ஏற்படும் அளவுக்கு கிசுகிசுக்கள் அதிகமானதால், நடிகை மிருணாள் தாக்கூர் மறுத்தார்.
இப்படி இருக்கையில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மிருணாஸ் தாக்கூர் இணைவது 100 சதவீதம் உறுதி ஆகியுள்ளதாக பிரபலங்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர். அதாவது இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றவுள்ளனராம். நடிகர் தனுஷ் நடிப்பில் வரும் 30ஆம் தேதி கர படம் வெளியாகவுள்ளது. தற்போது அவர் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55 வது படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் தயாரிப்பாளராகவும் தனுஷ் உள்ளார். படத்தில் மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்குப் பிறகு தனுஷ் இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து, மாரி செல்வராஜ் உள்ளிட்டோரின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
தனுஷ் உடன் மிருணாள்: இப்படி இருக்கையில் அவரது இயக்கத்தில் அடுத்த படம் உருவாகவுள்ளது என்று தகவல்கள் வெளியாக உள்ளது. இந்த படத்தில் தான் நடிகை மிருணாள் தாக்கூருடன் இணைந்து பணியாற்றவுள்ளார், என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் கதை ஒரு நாட்டுப்புற தெய்வத்தை மைய்யமாக கொண்டது என்றும், இந்த படத்திற்கான போட்டோ சூட் போன்ற முதல் கட்ட வேலைகள் எல்லாம் சிறப்பாக முடிந்துவிட்டது என்றும் கூறப்படுகிறது. படத்தின் கதைக்களம் 1960களில் நடப்பது போல உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

படப்பிடிப்பு எப்போது?: மேலும் தற்போது தனுஷ் நடித்து வரும் படத்தின் அடுத்தடுத்த கட்ட படப்பிடிப்புகளுக்கு நடுவே தனது படத்தை இயக்க தனுஷ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நடிகர் தனுஷ் மற்றும் மிருணாள் தாக்கூர் சந்தித்துக் கொண்டது, லுக் டெஸ்ட் உள்ளிட்டவைகளுக்ககாக இருவரும் ஒன்றாக பயணம் செய்தது உள்ளிட்டவைகளை தான் இணையவாசிகள் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளார்கள் என்று கதையை கட்டிவிட்டு இருக்கலாம் என்று பலரும் பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications