தனுஷ் உடன் நேரடியாக மோதும் நயன்தாரா.. வெல்லப் போவது யாரு?.. மே 1ம் தேதி சம்பவம் இருக்கு!
சென்னை: நயன்தாரா மற்றும் தனுஷ் இணைந்து 'யாரடி நீ மோகினி' படத்தில் நடித்திருந்தனர். இந்த ஜோடி மீண்டும் இணையுமா என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படத்தில் இருவரும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டனர்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த நானும் ரவுடி தான் படத்தை தயாரித்ததும் தனுஷ் தான். ஒரு காலத்தில் நல்ல நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் அதன் பின்னர் பகையாளிகளாக மாறுவது போல சினிமாவில் தனுஷ் - நயன்தாரா இருவரும் NOC விவகாரத்தில் மோதிக் கொண்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அதன் பின்னர் தமிழ்நாட்டில் இருவரது படங்கள் வரும் போதெல்லாம் இருவரது ரசிகர்களும் ஐடி விங் ஆட்களும் மாறி மாறி ட்ரோல் செய்து படங்களை ஓடவிடாமல் செய்து வருவதாக குற்றச்சாட்டுகளும் கிளம்பின. சமீபத்தில் வெளியான விக்னேஷ் சிவனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் ஓடாமல் போனதற்கும் தனுஷ் ரசிகர்கள் தான் காரணம் எனக் கூறப்பட்டது. விக்னேஷ் சிவனும் பிரச்னையை முடித்துக் கொள்ளும் விதமாக பேட்டிகள் கொடுத்திருந்தார்.
தனுஷ் - நயன்தாரா நேரடி மோதல்: இந்நிலையில், இந்த வாரம் திரையரங்குகளில் தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே பாக்ஸ் ஆபீஸ் கிளாஷ் வெடிக்கும் நிலை உருவாகியுள்ளது ஒட்டுமொத்த திரையுலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏப்ரல் 30ம் தேதி தனுஷ், மமிதா பைஜு நடித்த 'கர' படம் வெளியாகவுள்ள நிலையில், மே 1ம் தேதி நயன்தாரா நடித்துள்ள பேட்ரியாட் படமும் வெளியாகிறது.

மம்மூட்டி - மோகன்லால் படம்: ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கவுள்ள நிலையில், மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்துள்ள பேட்ரியாட் படம் வரும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. கமல்ஹாசனை வைத்து படம் இயக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்ட நிலையில், அந்த படம் மிஸ் ஆன நிலையில், மகேஷ் நாராயணன் மம்மூட்டி மற்றும் மோகன்லாலை வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளார். இதில், நயன்தாரா, ரேவதி உள்ளிட்ட பிரபலங்களும் நடித்துள்ளனர்.
பாக்ஸ் ஆபீஸ் மோதல்: பேட்ரியாட் திரைப்படம் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள நிலையில், தனுஷின் கர படத்துக்கு மிகப்பெரிய போட்டியாக பாக்ஸ் ஆபீஸில் இந்த வாரம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மலையாள படங்கள் தமிழ் படங்களை விட வசூலில் பெரும் சாதனை படைத்து வரும் நிலையில், நயன்தாராவின் பேட்ரியாட் திரைப்படம் தனுஷின் கர படத்தை விட அதிக வசூலை ஈட்டுமா? அல்லது தனுஷ் தனது கெத்தை காட்டுவாரா? என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.


Click it and Unblock the Notifications