"நட்பும் ஒரு குடும்பத்தை போன்றது“ உங்களை என்றும் நேசிக்கிறேன் பிரபுதேவா.. தனுஷ் ஜாலி ட்விட் !
சென்னை : தமிழில் கலக்கியது போல இந்தியிலும் தனது கால் தடத்தை வெற்றிகரமாக பதித்து வரும் நடிகர் தனுஷ் இப்பொழுது ஹாலிவுட் வரை சென்று தமிழ் சினிமாவின் பெருமையை உலகறியச் செய்திருக்கிறார்.
அசுரன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் திரைப்படங்கள் மீதான பார்வை இந்திய அளவில் அதிகரித்து வரும் நிலையில் இப்போது ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
ரவுடி பேபி பாடல் யூடியூபில் கலக்கி கொண்டிருக்கும் நிலையில், அதில் ஒன்றாக பணியாற்றிய தனுஷ் மற்றும் பிரபுதேவா தங்களின் நட்பை மொட்டைமாடி வரை தொடர இந்த போட்டோக்கள் இப்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோரியோகிராஃபி
தமிழ் சினிமாவை கலக்கிய நடிகர்களில் வெகுசிலர் மட்டுமே இந்தியிலும் தங்களது கால்தடத்தை வெற்றிகரமாக பதித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் நடன இயக்குனருமான பிரபு தேவா பல திரைப்படங்களுக்கு நடனம் அமைத்து இருந்தாலும் மாரி 2 திரைப்படத்தில் ரவுடி பேபி பாடலுக்கு கோரியோகிராஃபி செய்திருந்தது உலக அளவில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று யூடியூபில் பல கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்து வருகிறது.

வசூல் மன்னனாக
நடிகராக மட்டுமல்லாமல் வெற்றிகரமான இயக்குனராகவும் இருக்கும் பிரபுதேவா தமிழில் போக்கிரி,வில்லு ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து பாலிவுட்டின் வசூல் மன்னனாக இருந்து வரும் சல்மான் கானின் அடுத்தடுத்த பிரம்மாண்ட படங்களையும் இயக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

அட்ராங்கி ரே
பிரபுதேவா தமிழ் சினிமாவில் இருந்து சென்று பாலிவுட்டிலும் கலக்கி வரும் நடிகர் தனுஷ் ராஞ்சனா திரைப்படத்திற்குப் பிறகு சமிதாப் மற்றும் இப்பொழுது அட்ராங்கி ரே ஆகிய திரைப்படங்களில் நடித்து கோலிவுட்டை போல பாலிவுட்டையும் தனது சிறந்த நடிப்பினால் கவர்ந்து வருகிறார்.

நட்பும் ஒரு குடும்பத்தை போன்றது
சிறுவயது முதலே நண்பர்களாக பழகி வரும் தனுஷ் மற்றும் பிரபுதேவா பல திரைப்படங்களிலும் ஒன்றாக பணியாற்றி இருக்கும் நிலையில் கடைசியாக ரவுடிபேபி பாடலுக்கு சேர்ந்து பணியாற்றி இன்று வரை தங்களது நட்பை நீட்டித்து வரும் நிலையில் இப்பொழுது மொட்டை மாடியில் இருவரும் ஜாலியாக பேசிக் கொண்டிருக்கும் புகைப்படத்தை தனுஷ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு "நட்பும் ஒரு குடும்பத்தை போன்றது, உங்களை என்றும் நேசிக்கிறேன் பிரபுதேவா" என நெகிழ்ந்து பதிவிட்டுள்ள புகைப்படம் இப்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











