Don't Miss!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- News மாயாவதியின் மாயவலை.. பாஜகவுக்கு 24 தொகுதிகளில் ஜாக்பாட்! பயந்து நடுங்கும் அண்ணன் மகன்!
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தியேட்டரில் திருச்சிற்றம்பலம் ஓடுதோ இல்லையோ.. தனுஷ், ராஷி கன்னா என்னம்மா ஓடுறாங்க பாருங்க!
சென்னை: திருச்சிற்றம்பலம் திரைப்படம் இன்று வெளியான நிலையில், முதல் நாளிலேயே ஏகப்பட்ட சம்பவங்கள் தியேட்டர்களில் அரங்கேறி உள்ளன.
ஒய் திஸ் கொலவெறி பாடலை பாடிய தனுஷுக்கே ரசிகர்கள் மரண பயத்தை காட்டிட்டாங்க..
புதுப்பேட்டை படத்தில் வரும் வசனத்தை போல என்ன பயப்படுறியா குமாரு என்பது போல தனுஷ் நடிகை ராஷி கன்னாவுடன் எடுத்த ஓட்டத்தை நெட்டிசன்கள் ஓட்டி வருகின்றனர்.
தனுஷின் திருச்சிற்றம்பலம் ரொம்ப பழைய கதையா?: பப்ளிக் ரிவிவ்யூல என்ன சொல்லிருக்காங்க?
கில்லி விஜய் போல
நடிகர் தனுஷ் தியேட்டரில் இருந்து நடிகை ராஷி கன்னாவை அழைத்துக் கொண்டு கில்லி படத்தில் மதுரையில் இருந்து பிரகாஷ் ராஜ் ஆட்களிடம் சிக்காமல் எப்படி உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓட்டம் எடுத்தாரோ அதே போல திருச்சிற்றம்பலம் ஓடிய தியேட்டரில் இருந்து வெளியே வர ஒரே ஓட்டமாக ஓடிய தனுஷின் வீடியோ டிரெண்டாகி வருகிறது.
நடிகையுடன் ஓடிய தனுஷ்
திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் தனுஷ் உடன் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் மற்றும் ராஷி கன்னா என மூன்று ஹீரோயின்கள் நடித்திருந்தனர். இந்நிலையில், திருச்சிற்றம்பலம் படத்தை பார்க்க ராஷி கன்னா மட்டுமே தனுஷ் உடன் வந்திருந்தார். ரசிகர்கள் கூட்டம் அலைமோத அங்கிருந்து அவரை காப்பாற்றி ரசிகர்களிடம் சிக்காமல் தனுஷ் ஓடி வந்த வீடியோவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
நல்லவேளை மூணு பேரும் வரல
ராஷி கன்னா மட்டும் வந்த நிலையில், தனுஷ் ஒரு நடிகையின் கையை பிடித்துக் கொண்டு தனது ரசிகர்களிடம் சிக்காமல் ஓடி வந்தார். நல்லவேளையாக மூன்று ஹீரோயின்களையும் தியேட்டருக்கு கெத்தாக கூட்டிச் சென்று இருந்தால், அவரது நிலை என்ன ஆகியிருக்கும் என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
செவல தாவுடா தாவு
வடிவேலு, முரளி காமெடியில் வருவது போல செவல தாவுடா தாவு என்கிற ரேஞ்சுக்கு தலை தப்பித்தது தம்புரான் புண்ணியம் என்பது போல தனுஷ் மற்றும் ராஷி கன்னா ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்காமல் காருக்குள் வந்து அங்கிருந்து தப்பிச் சென்ற வீடியோவை ஏகப்பட்ட மீம் மெட்டீரியலாக நெட்டிசன்கள் மாற்றி வருகின்றனர்.
திருச்சிற்றம்பலம் ஓடுதோ இல்லையோ
தியேட்டரில் திருச்சிற்றம்பலம் படம் ஓடுதோ இல்லையோ தியேட்டரில் இருந்து தப்பிச்சோம் பிழைச்சோம் என தனுஷ் ஓடிட்டார் அதுவும் நடிகை ராஷி கன்னாவுடன் என நெட்டிசன்கள் வேற லெவலில் பங்கம் செய்து வருகின்றனர். இதற்கு மேல் தனுஷ் ரசிகர்களுடன் படம் பார்க்க வரவே மாட்டார், ஏன் டா இப்படி பண்றீங்கன்னு தனுஷ் ரசிகர்களே சக தனுஷ் வெறியர்களை திட்டி வருகின்றனர்.