Just In
- 5 min ago
அதிகாரத்தை பயன்படுத்தி மகனின் படப்பிடிப்புக்கு அனுமதி வாங்கினாரா? முன்னாள் ஹீரோயின் விளக்கம்!
- 12 min ago
நீச்சல் குளத்தில் மொத்த முதுகையும் காட்டி.. மிரள விடும் பிக் பாஸ் ஷெரின்.. குவியுது லைக்ஸ்!
- 34 min ago
நான் கடவுள் இல்லை! S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி
- 43 min ago
சேலையில் பின்னழகை காட்டி சுண்டி இழுக்கும் தமிழ் நடிகை!
Don't Miss!
- Automobiles
ஷாங்காய் மாக்லேவை விட விரைவாக செல்லும்... உலகின் அதிவேக ரயிலை அறிமுகம் செய்து கெத்து காட்டிய சீனா!
- News
இதான் சீமான்.. "பன்றிதான் கூட்டமாக வரும்.. ஆனால் சிங்கம்".. சொன்னதை செய்து.. லிஸ்ட் அறிவித்து.. செம!
- Sports
ஓரமாக உட்கார்ந்து இருந்தேன்.. உங்கள் டீமை விட்டு போனதே சந்தோசம்.. ஐபிஎல் அணியை வெளுத்த இளம் வீரர்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 23.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் தங்களது காதலை வெளிப்படுத்த உதந்த நாளாம்…
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நானே வருவேன்.. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ்.. அடுத்த படம் அறிவிப்பும் மிரட்டுதே!
சென்னை: அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தம்பி தனுஷ் நடிக்கவுள்ள புதுப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி மிரட்டி வருகிறது.
நானே வருவேன் என வித்தியாசமான டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் செல்வராகவன் மற்றும் தனுஷ் தற்போது தங்கள் ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட் கொடுத்துள்ளனர்.
தனுஷ் நடிப்பில் வரிசை காட்டி ஏகப்பட்ட படங்கள் உருவாகி வரும் நிலையில், அடுத்த சில ஆண்டுகளுக்கு செம கொண்டாட்டம் தான்.

மீண்டும் அண்ணனுடன்
அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் படத்தில் நடித்து நடிகராக பிரபலமானவர் தனுஷ். தொடர்ந்து, புதுப்பேட்டை, மயக்கம் என்ன உள்ளிட்ட படங்களும் தனுஷின் நடிப்பை மெருகேற்றியது. இந்நிலையில், தற்போது மீண்டும் அண்ணன் செல்வராகவன் உடன் இணைந்து தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

புதுப்பேட்டை 2
தனுஷும் செல்வராகவனும் யுவனும் மீண்டும் இணைகின்றனர் என்றதும் புதுப்பேட்டை 2 படத்துக்காகத்தான் என ரசிகர்கள் நினைத்து வந்த நிலையில், தற்போது அதற்கு முன்னதாகவே ஒரு படத்தில் இந்த மூவரும் இணைந்து பணியாற்ற உள்ளனர் என்பது தெளிவாகி உள்ளது. புதுப்பேட்டை 2ம் பாகத்திற்காகவும் ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட் செய்து வருகின்றனர்.

ஆயிரத்தில் ஒருவன் 2
2021 புத்தாண்டை முன்னிட்டு ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகம் உருவாகப் போகிறது என்கிற சந்தோஷமான அறிவிப்பை இயக்குநர் செல்வராகவன் மற்றும் தனுஷ் அறிவித்து ரசிகர்களை மீண்டுமொரு சோழ தேசத்து பயணத்துக்கு தயார் செய்தனர். ஆனால், அந்த படம் 2024ம் ஆண்டு தான் வெளியாகும் என்றும் அறிவித்தனர்.

12வது படம்
இந்நிலையில், தற்போது செல்வராகவனின் 12வது படத்தின் அறிவிப்பு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இயக்குநர் செல்வராகவன் வித்தியாசமான டைட்டில் லுக் போஸ்டர் அறிவிப்புகளை போட்டு தனுஷ் ரசிகர்களை கொண்டாட்ட மோடுக்கு கொண்டு சென்றார்.

நானே வருவேன்
இந்நிலையில், தற்போது செல்வராகவனின் 12வது படத்தின் டைட்டில் வெளியாகி உள்ளது. நடிகர் தனுஷ், டபுள் கலர் ஷேடில் இருப்பது போன்றும், பின்னாடி துப்பாக்கிகள் சூழ கலர்ஃபுல்லான பின்னணியில் இருக்கும் டைட்டில் லுக் போஸ்டர் ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

வாயில் தம்மோடு
இன்னொரு டைட்டில் லுக்காக நடிகர் தனுஷ் வாயில் தம்மோடு ஸ்டைலாக நிற்க, பின்னாடி காடும், காட்டு பங்களா ஒன்றும் பற்றி எரிவது போல அட்டகாசமாக உருவாகியுள்ள போஸ்டர் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. விரைவில் இந்த படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போ ரிலீஸ்
மாஸ்டர், பூமி, சூரரைப் போற்று, ஈஸ்வரன் உள்ளிட்ட படங்கள் வெளியாகி உள்ள நிலையில், ஜகமே தந்திரம் திரைப்படம் எப்போது ரிலீசாகும் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சீக்கிரமே ஜகமே தந்திரம் திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வரிசை கட்டி
ஜகமே தந்திரம் படத்தைத் தொடர்ந்து இந்தி படமான அட்ரங்கி ரே, மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன், கார்த்திக் நரேன் இயக்கத்தில் டி43 என ஏகப்பட்ட படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் இயக்குநர்கள் இயக்கத்தில் கிரே மேன் என ரவுண்டு கட்டி ஆடி வருகிறார் தனுஷ்.