மனைவியை விவாகரத்து செய்த தனுஷ்.. மீண்டும் ஜோடி சேரும் ஸ்ருதிஹாசன்.. அதுவும் அந்த இயக்குநர் படத்திலா?
சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த '3' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த ஸ்ருதிஹாசன் மீண்டும் தனுஷுக்கு ஜோடியாக பல ஆண்டுகள் கழித்து நடிக்கப் போவதாக தகவல்கள் உலா வருகின்றன. நடிகை ஸ்ருதிஹாசன் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தமிழில் ரஜினிகாந்தின் கூலி, விஜய் சேதுபதியின் ட்ரெயின் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் மீண்டும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறியுள்ளார். ஆரம்பத்தில் அவர் நடித்த படங்கள் எல்லாம் பெரிய வெற்றி பெறாமல் தோல்வி தழுவி வந்த நிலையில், தெலுங்கு, இந்தி மொழிப் படங்களில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டினார்.

தனுஷ் உடன் இணைந்து நடித்த '3' திரைப்படம் தனக்கு எந்தவொரு வெற்றியையும் தரவில்லை என்றும் அந்த படத்திற்கு பிறகு 2 ஆண்டுகள் தன்னை நடிக்க யாருமே தமிழ் சினிமாவில் அழைக்கவில்லை என்றும் சமீபத்தில் ஸ்ருதிஹாசன் பேட்டிக் கொடுத்திருந்த நிலையில், மீண்டும் தனுஷ் - ஸ்ருதிஹாசன் இணைந்து நடிக்கப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
செம கெமிஸ்ட்ரி: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான '3' படத்தில் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் இருவருக்கும் இடையே இருந்த கெமிஸ்ட்ரி அளவுக்கு வேறு எந்த ஹீரோயினுடனும் தனுஷ் அவ்வள்வு நெருக்கமாக நடித்தது கிடையாது என்றும் ஸ்ருதிஹாசனும் மற்ற நடிகர்களுடன் இந்தளவுக்கு செம க்ளோஸ் ஆக நடிக்கவில்லை என்றும் இருவருக்கும் இடையே ரொமான்ஸ் காட்சிகள் எல்லாம் அப்படி வொர்க்கவுட் ஆகியிருந்தது என ரசிகர்கள் அந்த படம் ரீ ரிலீஸ் ஆனபோது தூக்கி வைத்து கொண்டாடியதை பார்த்து தானே ஆச்சர்யமடைந்தேன் என ஸ்ருதிஹாசன் தெரிவித்திருந்தார்.
அமரன் இயக்குநர் படத்தில்: நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகிறது. ஏப்ரல் 10ம் தேதி அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்துக்குப் போட்டியாக இட்லி கடை படம் வெளியாகிறது. சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் குபேரா படமும் இந்த ஆண்டு வெளியாக காத்திருக்கிறது. அடுத்ததாக தனுஷ் அமரன் படத்தின் இயக்குநரான ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வரும் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் தான் நடிக்கப் போகிறார் என்றும் ஸ்ருதிஹாசனை ராஜ்குமார் பெரியசாமி அணுகிய மாத்திரத்திலேயே அவர் உடனடியாக ஓகே சொல்லிவிட்டார் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் உலா வருகின்றன.


Click it and Unblock the Notifications











