பெண் கலைஞர்களுக்கு இடமே இல்லையா?..சின்மயி காட்டம்..திட்டி தீர்க்கும் தனுஷ்,சிவகார்த்திகேயன் ரசிகர்கள்
சென்னை: தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக தனது தடத்தை பதித்தவர் சின்மயி. ஏராளமான ஹிட் பாடல்களை பாடியிருக்கும் அவர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியிருக்கிறார். தேசிய விருதையும் வென்றிருக்கும் அவர் தனது மனதில் பட்டதை ஓபனாக பேசுபவர். அந்தவகையில் அவர் இப்போது போட்டிருக்கும் ட்வீட் ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அதேசமயம் அவரை தனுஷ் ரசிகர்கள் கமெண்ட்ஸில் திட்டவும் செய்திருக்கிறார்கள்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவான கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வைரமுத்து எழுதிய, 'ஒரு தெய்வம் தந்த பூவே' பாடல் பாடி திரைத்துறையில் பாடகியாக அறிமுகமானவர் சின்மயி. அந்தப் பாடல் இன்றுவரை க்ளாசிக் பாடலாக கொண்டாடப்படுகிறது. அதற்கு இசையும், வரிகளும் முக்கிய காரணம் என்றாலும்; சின்மயி தனது குரலால் அந்தப் பாடலை வேறு தளத்திற்கு உயர்த்தி கொண்டு சென்றிருப்பார். அந்தப் பாடலுக்காக அவர் தேசிய விருதும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னணி பாடகி: அந்தப் பாடலுக்கு பிறகு சின்மயிக்கு ஏராளமான பாடல் வாய்ப்புகள் கிடைத்தன. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பாடியிருக்கிறார். குறிப்பாக ரஹ்மானின் இசை என்றால் சின்மயி அட்டகாசமாக பாடிவிடுவார். அதிலும் குரு படத்தில் இடம்பெற்றிருக்கும் மையா மையா பாடல் எல்லாம் அவ்வளவு அருமையாக இருக்கும். ரஹ்மான் மட்டுமின்றி ஹாரிஸ் ஜெயராஜ், கோவிந்த் வசந்தா என பலரின் இசையில் பாடி பின்னணி பாடகிகளில் முன்னணி இடத்தில் இருப்பவர்.
மீ டூ சர்ச்சை: பின்னணி பாடகியாக மட்டுமின்றி டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் தனது குரலால் அடையாளப்பட்டவர் அவர். விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்களில் திரிஷாவுக்கு குரல் கொடுத்த அவர்; மீ டூ சர்ச்சையிலும் காத்திரமாக தனது குரலை பதிவு செய்தார். பிரபல கவிஞர் மீது அவர் வைத்த குற்றச்சாட்டு பெரும் புயலை கிளப்பினாலும்; அந்த சர்ச்சையில் சின்மயியை பலரும் கடுமையாக விமர்சித்தார்கள். இருந்தாலும் சின்மயி தனது குரலை குறைக்கவில்லை. அதுமட்டுமின்றி பெண்களுக்காகவும், அவர்கள் சந்திக்கும் பிரச்னைக்காகவும் சின்மயி தொடர்ந்து பேசிவருகிறார்.
சின்மயி ட்வீட்: இந்நிலையில் சின்மயி தற்போது போட்டிருக்கும் ட்வீட் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது மாரி படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் ஒரு பில்லியன் பார்வைகளை பெற்ற போஸ்டரையும், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி 300 கோடி ரூபாய் வசூலித்த அமரன் பட போஸ்டரையும் பகிர்ந்து, "தெற்கில் திறமையான பெண் கலைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் சக்சஸ் போஸ்டர்களில் அவர்களுக்கான இடம் எதுவுமே கிடைப்பதில்லை. பாடகி தீயின் குரல் ரவுடி பேபி பாடலில் ட்ரிப்பியாக இருக்கும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தனுஷ் ரசிகர்களும், சிவகார்த்திகேயன் ரசிகர்களும்: இந்த ட்வீட் ஒருபக்கம் ட்ரெண்டானாலும் சின்மயியை தனுஷ் ரசிகர்கள் திட்ட ஆரம்பித்திருக்கிறார். சின்மயினுடைய ட்வீட்டில் அவர்கள் ரவுடி பேபி பாடல் போஸ்டரில் தனுஷும், சாய் பல்லவியும் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து இன்னும் நீங்கள் வளர வேண்டும் என்று கூறிவருகின்றனர். அதேபோல் அமரன் படத்தின் 25ஆவது நாள் போஸ்டரில் சிவகார்த்திகேயனும், சாய் பல்லவியும் இருக்கும் புகைப்படங்களையும் பகிரும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் நீங்கள் பகிர்ந்திருக்கும் அமரன் சக்சஸ் போஸ்டர் ரசிகர்களால் உருவாக்கப்பட்டது; அதிகாரப்பூர்வமான போஸ்டரில் சாய் பல்லவியும் இருக்கிறார். எது உண்மையான போஸ்டர் என்பதை தெரிந்துகொள்ளுங்கள் என்று கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











