தனுஷ் - சிவகார்த்திகேயன் சந்திப்பு..சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபலங்கள்.. சூப்பர் விஷயம்!

சென்னை: எம்ஜிஆர் - சிவாஜி காலத்தில் இருந்தே ரசிகர்களுக்கு இடையே சண்டைகள் நடைபெற்று வந்த நிலையில், ரஜினி - கமல் காலத்திலும் அது தொடர்ந்து, அப்படியே அஜித் - விஜய்க்கு சென்று சிம்பு - தனுஷ் என நீண்டு கடைசியில் தனுஷ் - சிவகார்த்திகேயன் என ஓடிக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் நடைபெற்ற கொட்டுக்காளி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியின் போது சிவகார்த்திகேயன் பேசிய பேச்சுக்கு எதிராக தனுஷ் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் தனுஷை தான் சிவகார்த்திகேயன் தாக்கி பேசினார் என பொங்கினர்.

Dhanush Sivakarthikeyan kottukkaali


இந்நிலையில், அனைத்து சர்ச்சைகளுக்கும் இருவரும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துக் கொண்ட புகைப்படம் ஒன்று டிரெண்டாகி வருகிறது.

தூக்கி விட்ட தனுஷ்: விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் ஏகப்பட்ட நடிகர்களின் ஃபேவரைட் ஆனார். விஜய், சூர்யா, தனுஷ் என பலரும் சிவகார்த்திகேயனின் திறமையை அப்போதே பாராட்டினர். பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான மெரினா படத்தில் நடித்த சிவகார்த்திகேயனுக்கு ’3’ படத்தில் தன்னுடன் இணைந்து நண்பராக நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார். ஆனால், சிவகார்த்திகேயன் ஹீரோ மெட்டீரியல் என்பதை புரிந்துக் கொண்ட தனுஷ் தனது தயாரிப்பில் எதிர்நீச்சல், காக்கிச் சட்டை படங்களில் அவரை ஹீரோவாக நடிக்க வைத்து கமர்ஷியல் ஹீரோவாக உயர்த்தி விட்டார்.

தனுஷ் - சிவகார்த்திகேயன் மோதல்: எதிர்நீச்சல் படம் ஓடிய அளவுக்கு காக்கிச் சட்டை படம் கைகொடுக்கவில்லை. அதன் பின்னர் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சிவகார்த்திகேயன் தனுஷ் படங்களில் இருந்து விலகினார். மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே மோதல் வெடித்ததாக பரபரப்பு பற்றிக் கொண்டது. சிவகார்த்திகேயன் படங்களுக்கு அனிருத் இசையமைக்க சென்ற நிலையில், தனுஷ் மற்றும் அனிருத் இடையேவும் பிரச்சனைகள் வெடித்ததாக கூறப்பட்டது.

ஒரே இடத்தில் தனுஷ் - சிவகார்த்திகேயன்: சமீபத்தில், சூரி நடிப்பில் உருவான கொட்டுக்காளி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் தான் யாரையும் வளர்த்து விட்டேன் என சொல்ல மாட்டேன், என்னை அப்படி சிலர் சொன்னார்கள் என பேசியது பஞ்சாயத்தை கிளப்பியது. இந்நிலையில், தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஒரே இடத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் இருக்கும் புகைப்படம் எனக் கூறுகின்றனர். விரைவில் மேலும், சில புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகும் என தெரிகிறது.

தேவையற்ற ரசிகர்கள் சண்டை: நடிகர்கள் எப்படியும் ஒன்றாகவும் ஹேப்பியாகவும் ராஜ வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கப்போகின்றனர். ஆனால், அவர்களுக்காக தேவையில்லாமல் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ஆபாச ட்ரோல்களையும், கமெண்ட்டுகளையும் பதிவிட்டு சண்டை போட்டு சப்போர்ட் செய்து கடைசியில் பல்பு வாங்குவது தான் மிச்சம் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X