சைடு வாங்கிய வாத்தி, கேப்டன் மில்லர்… அடுத்த படத்துக்கு ரெடியான தனுஷ்... இன்று பூஜையுடன் தொடக்கம்?

சென்னை: தமிழ், தெலுங்கு மொழிகளில் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் டிசம்பர் மாதம் ரிலீஸில் இருந்து பின்வாங்கியுள்ளது.

தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் தனுஷ்.

இந்நிலையில், தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிஸி மோடில் தனுஷ்

பிஸி மோடில் தனுஷ்

தனுஷ் நடிப்பில் இந்தாண்டு மொத்தம் 5 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட்டில் அத்ரங்கி ரே, ஹாலிவுட்டில் தி கிரே மேன், தமிழில் மாறன் ஆகிய படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகின. அதேபோல், திரையரங்குகளில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' சூப்பர் ஹிட் அடித்ததோடு, பாக்ஸ் ஆபிஸிலும் பவர்ஃபுல் கலெக்‌ஷன் செய்தது. இதனைத் தொடர்ந்து வெளியான 'நானே வருவேன்' தனுஷ் ரசிகர்களுக்கு திருப்தியை கொடுத்தது. இந்நிலையில், டிசம்பரில் வெளியாகவிருந்த தனுஷின் வாத்தி திரைப்படம், அடுத்தாண்டு பிப்ரவரி ரிலீஸுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

புதிய படத்தின் பூஜை

புதிய படத்தின் பூஜை

நானே வருவேன், வாத்தி படங்களை முடித்த அதேவேகத்தில் கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் கலந்துகொண்டார் தனுஷ். அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் பீரியட் ஜானர் ஆக்சன் படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. தென்காசி, கேரளா பகுதிகளில் உள்ள காடுகளில் கேப்டன் மில்லர் ஷூட்டிங் நடைபெற்று வந்தது. இந்நிலையில், மழை காரணமாக தற்போதைக்கு சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால், தனது அடுத்த படத்திற்கான பூஜையை போட்டுவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் தனுஷ்.

மூன்று மொழிகளில் தனுஷ்

மூன்று மொழிகளில் தனுஷ்

தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்தை சேகர் கம்முலா இயக்கவுள்ளது குறித்து ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகிவிட்டது. தெலுங்கில் டாலர் ட்ரீம்ஸ், ஹேப்பி டேய்ஸ், லீடர், லைஃப் இஸ் பியூட்டிபுல், ஃபிடா, லவ் ஸ்டோரி போன்ற சூப்பர் படங்களை கொடுத்துள்ள சேகர் கம்முலா, முதன்முறையாக தனுஷுடன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஜனவரியில் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

இன்று பூஜையுடன் தொடக்கம்

இன்று பூஜையுடன் தொடக்கம்

>
>
> தனுஷ் - சேகர் கம்முலா கூட்டணியில் உருவாகும் இந்தப் படம், 1950களின் கால பின்னணியில் பொலிட்டிக்கல் ஜானர் படமாக உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரே நேரத்தில் மூன்று மொழிகளிலும் உருவாக உள்ளதால் படம் மீதான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தனுஷின் புதிய படத்திற்கான பூஜை, இன்று ஹைதராபாத்தில் நடைபெறுகிறது என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இந்தப் படத்தில் நடிகர்கள், நடிகைகள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X