இது டி-சர்ட் பஞ்சாயத்து.. நடிகர் தனுஷ் வீட்டில் நடந்த சுவாரஸ்யமான விவாதம்.. வைரலாகும் போட்டோ!

By

சென்னை: நடிகர் தனுஷ் வீட்டில் டிசர்ட்டுக்காக சுவாரஸ்யமான விவாதம் நடந்திருக்கிறது.

Recommended Video

Dhanush ரசிகர்கள் அசத்தல் முயற்சி • கோவை நிழல் இல்லம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன.

இதனால் சினிமா துறை மொத்தமாக முடங்கி இருக்கிறது. தயாரிப்பாளர்கள் கடும் பொருளாதார நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

டிஜிட்டல் ரிலீஸ்

டிஜிட்டல் ரிலீஸ்

இதனால் சில தயாரிப்பாளர்கள் ஒடிடி தளங்களில் தங்கள் படங்களை வெளியிட்டு வருகின்றனர். நடிகை ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின் உள்பட சில படங்கள் டிஜிட்டலில் வெளியிடப்பட்டன. இந்நிலையில் நடிகர் சூர்யா, தனது சூரரைப் போற்று படத்தை அமேசான் பிரைமில் வெளியிடுவதாக அறிவித்து விட்டார்.

முன்னணி நடிகர்

முன்னணி நடிகர்

இன்னும் சில படங்களின் தயாரிப்பாளர்கள் ஒடிடி-யில் படங்களை வெளியிடுவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். படப்பிடிப்புகள் இல்லாததால் நடிகர், நடிகைகள் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கின்றனர். அதில் ஒருவர் நடிகர் தனுஷ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ். பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல துறைகளில் தன் திறமையை நிரூபித்து வருகிறார்.

டிசர்ட்

டிசர்ட்

இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு, நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். தனது இரண்டு மகன்களுடனும் தான் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனுஷ் வெளியிட்டுள்ளார். அதற்கு கேப்ஷனாக, 'உங்கள் மூத்த மகன் உங்கள் டிசர்ட்டை அணிந்துகொண்டு, தன்னுடையது என்று விவாதிக்கும் தருணம்' என்று கூறியுள்ளார்.

நடிகை அதிதி ராவ்

நடிகை அதிதி ராவ்

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு ஏராளமான ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். நடிகை அதிதி ராவ் ஹைதாரி, ;அவர்கள் உங்களை இனிமையாக துன்புறுத்துகிறார்கள் என்று நம்புகிறேன்' எனத் தெரிவித்துள்ளார். ஒரு ரசிகை, எங்க வீட்டுலயும் இதே போல நடந்தது, நீங்களும் போஸ்ட் பண்ணிருக்கீங்க என்று ஆச்சர்யப்பட்டுள்ளார்.

ஜகமே தந்திரம்

ஜகமே தந்திரம்

நடிகர் தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ஜகமே தந்திரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் டிஜிட்டலில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அடுத்து மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இதன் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்துவிட்டது. அடுத்து, அட்ரங்கி ரே என்ற இந்தி படத்தில் அக்‌ஷய்குமார், சாரா அலிகான் ஆகியோருடன் நடிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X