டி.என்.ஏ. ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்: தனுஷும், அனிருத்தும்...
சென்னை: தனுஷும், அனிருத்தும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள்.
தனுஷ் நடித்த 3 படம் மூலம் இசையமைப்பாளர் ஆனவர் அனிருத். தனுஷின் ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்தார் அனிருத். பின்னர் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.
இந்நிலையில் அவர்கள் மீண்டும் சேரப் போவதாக கூறப்பட்டது.

தனுஷ்
அனிருத், தனுஷ் எப்பொழுது மீண்டும் சேர்ந்து பணியாற்றுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில் அடுத்த ஆண்டு சேரப் போவதாக அனிருத் தெரிவித்தார்.

டிஎன்ஏ
விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் அனிருத்தும், தனுஷும் கலந்து கொண்டனர். இருவரும் மேடையில் கட்டிப்பிடித்ததை பார்த்த ரசிகர்கள் அவர்கள் ஏற்கனவே சேர்ந்துவிட்டனர் என்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சவுந்தர்யா
ஒய்.ஜி. மகேந்திரன் மகன் திருமண நிகழ்ச்சியிலும் சரி, சவுந்தர்யா ரஜினிகாந்த் மகனின் பிறந்தநாள் நிகழ்ச்சியிலும் சரி அனிருத்தும், தனுஷும் கட்டிப்பிடித்து என்ன அருகருகே நின்று கூட புகைப்படம் எடுக்கவில்லை. எப்படியோ சேர்ந்தால் சரிதான்பா.

கலாய்
விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் மா.கா.பா. ஆனந்த் நயன்தாராவை மேடைக்கு அழைத்து வில்லங்கமான கேள்விகள் கேட்டு கலாய்த்துள்ளார். எங்க தலைவியை பார்த்தால் உங்களுக்கு எல்லாம் நக்கலா இருக்கா என்று நயன்தாரா ரசிகர்கள் கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











