சண்டையா, யார் சொன்னது?: ரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்
Recommended Video

சென்னை: தனுஷ் மற்றும் அனிருத் ரஜினிக்காக ஒன்று சேர்ந்துள்ளனர்.
தனுஷின் ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்தவர் அனிருத். அதன் பிறகு அவர்களுக்கு இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். அனிருத்தை பிரிந்த பிறகு தனுஷின் மனம் கவர்ந்த இசையமைப்பாளர் ஆகிவிட்டார் ஷான் ரோல்டன்.
தனுஷ், அனிருத் மீண்டும் கூட்டணி சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதே அவர்களின் ரசிகர்களின் விருப்பம்.

தனுஷ்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள பேட்ட படத்தில் ரஜினிக்காக தனுஷும், அனிருத்தும் ஒன்று சேர்ந்துள்ளனர். அதாவது இளமை திரும்புதே என்ற பாடலை தனுஷ் எழுதியுள்ளார். அந்த பாடலுக்கு இசையமைத்ததுடன் தானே பாடியுள்ளார் அனிருத். இந்த பாட்டு நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.

அனிருத்
தனுஷ் படத்திற்கு விரைவில் அனிருத் இசையமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அடுத்த ஆண்டு அனிருத் தனுஷ் படத்திற்கு இசையமைக்க உள்ளாராம். அடுத்த ஆண்டு இது நிச்சயம் நடக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பேட்ட படத்திற்காக இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

3 ஆண்டுகள்
தங்கமகன் படத்தை அடுத்து தனுஷ் படத்திற்கு அனிருத் இசையமைக்கவில்லை. 3 ஆண்டுகள் கழித்து அடுத்த ஆண்டாவது அவர்கள் கூட்டணி சேர்ந்து சூப்பர் ஹிட் கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

நண்பர்கள்
தனுஷுக்கும், அனிருத்துக்கும் இடையே இருந்த மனஸ்தாபம் தீர்ந்துவிட்டது என்று தகவல் கிடைத்துள்ளது. பிரச்சனை தீர்ந்தால் சரி. மீண்டும் பழைபடி சேர்ந்து இருந்து மற்றொரு கொலவெறி ஹிட் கொடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











