அசுரர்களுக்கு நடுவே கர்ணன்.. டீசர் ரிலீஸ் தேதியை அறிவித்த தனுஷ்.. டிரெண்டாகும் #KarnanTeaser
சென்னை: தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள கர்ணன் திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இந்த படத்தை இயக்கி உள்ளார்.
தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகையான ரஜிஷா விஜயன் இந்த படத்தில் நடித்துள்ளார். மேலும், '96', மாஸ்டர் படங்களில் நடித்துள்ள கெளரி கிஷனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதிக எதிர்பார்ப்பு
மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு இன்னமும் ஒரு பெரிய திரைப்படம் திரையரங்குகளுக்கு வரவில்லை. இந்நிலையில், தனுஷின் கர்ணன் திரைப்படத்தை பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வரும் ஏப்ரல் 9ம் தேதி கர்ணன் திரைப்படம் திரைக்கு வருகிறது.

டீசர் எப்போ
சந்தோஷ் நாராயணன் இசையில் கர்ணன் படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், கர்ணன் டீசர் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். ஹாலிவுட்டில் படப்பிடிப்பில் இருந்தாலும், கர்ணன் படத்தின் அப்டேட்களை கொடுத்து வரும் நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் பட டீசர் வரும் மார்ச் 23ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார்.

அசுரர்களுக்கு மத்தியில்
அசுர பொம்மைகளுக்கு நடுவே கத்தியை வைத்துக் கொண்டு கர்ணன் தனுஷ் இருக்கும் புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. திரெளபதையின் முத்தம் பாடலில் இடம் பெற்றது போல இந்த போஸ்டரும் சர்ச்சைகளை கிளப்புமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தெறிக்கும் டிரெண்டிங்
நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருந்த கர்ணன் படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அப்டேட்டை வெளியிட்ட நிலையில், #KarnanTeaser என்கிற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து தெறிக்க விட்டு வருகின்றனர். அசுரன் திரைப்படத்தை போலவே கர்ணன் திரைப்படமும் தனுஷின் நடிப்புக்கு தீனி போட்டிருக்கும் என்பதே ரசிகர்களின் நம்பிக்கை.


Click it and Unblock the Notifications











