விஐபியிலிருந்து “வாத்தி“யான தனுஷ்… வெளியானது டைட்டில் லுக் போஸ்டர்!
சென்னை : தனுஷ் நடிக்கும் முதல் நேரடி தெலுங்கு படத்தின் பெயர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
படத்தின் தலைப்பை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் சரியாக காலை 9.30 மணிக்கு வெளியிட்டார்.
இந்த டைட்டில் போஸ்டரை தனுஷின் ரசிகர்கள் டிராண்டாக்கி வருகின்றனர்.

தனுஷ்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் பாலிவுட், ஹாலிவுட் என அனைத்திலும் கலக்கிக் கொண்டு இருக்கிறார். சமீபத்தில் தனுஷ் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

டைட்டில் லுக் போஸ்டர்
இந்நிலையில், தனுஷ் நடிக்கவிருக்கும் முதல் நேரடி தெலுங்கு திரைப்படத்தின் பெயர் இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் வெளியாகவிருக்கும் இப்படத்திற்கு 'வாத்தி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை வெங்கி அட்லுரி என்பவர் இயக்க உள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சற்றுமுன் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது முதல் நேரடி தெலுங்கு திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

பான் இந்திய படம்
இந்தியத் திரையுலகத்தில் தற்போது பான் இந்தியா படங்கள் அதிகமாகி வருகிறது. தென்னிந்திய மொழிகளில் தயாராகும் படங்கள், ஹிந்தியில் தயாராகும் படங்கள் இந்திய அளவில் வெளியாகி வருகின்றன. இனி வரும் காலங்களில் இது போன்ற படங்கள் அதிகம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

படு பிஸி
தனுஷ் நடிப்பில் தி க்ரே மேன், அத்ரங்கி ரே, மாறன் படங்கள் முடிந்துள்ளன. இதில் தி க்ரே மேன், அத்ரங்கி ரே இரண்டும் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளன. மாறன் திரைப்படமும் ஓடிடியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர சன் பிக்சர்ஸின் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











