அடங்காத அசுரன் பாடலை இசை அசுரனுடன் போட்டு போட்டு பாடிய நடிப்பு அசுரன்.. ட்ரெண்டாகும் வீடியோ!
சென்னை: தனுஷின் 50வது படமான ராயன் படத்தை தானே இயக்கி நடிக்கவும் செய்திருந்தார். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று அதாவது ஜூலை 6ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் படம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக விழா மேடையில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றது.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ராயன் படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் தனுஷின் 50வது படம் என்பதால் அவரே இந்தப் படத்திற்கான கதையை எழுதி இயக்கியும் உள்ளார். இந்த படத்தில் செல்வராகவன், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன், வரலஷ்மி சரத்குமார், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன் என பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ராயன் படம் வரும் 26ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகின்றது.

இப்படம் தனுஷ்ஷின் 50வது படம் என்பதால் இந்த படத்தை மற்ற இயக்குநர்களிடம் கொடுத்து அவர்கள் மீது அழுத்ததைப் போடுவதற்கு பதிலாக அந்த பொறுப்பையும் அழுத்ததையும் தானே ஏற்றுக்கொண்டு தனே இயக்கியும் உள்ளார். இதுமட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்திருக்கின்றார். இந்த படத்தில் ஒரு பாடலை தனுஷ் பாடியுள்ளார்.
பாடல்கள்: படத்தின் முதல் பாடல் என வெளியிடப்பட்ட அடங்காத அசுரன் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த பாடலை தனுஷ் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானுடன் இணைந்து பாடியுள்ளார். இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று அதாவது ஜூலை 6ஆம் தேதி வெளியானது. படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ளது. படக்குழு சார்பாக இசை வெளியீட்டு விழாவுக்கு முன்னரே மூன்று பாடல்கள் ரிலீஸ் செய்யப்பட்டு மெகா ஹிட் பாடலாக அமைந்தது.

ஏ.ஆர். ரகுமான்: இந்நிலையில் நேற்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் படத்தின் நடிகர் மற்றும் இயக்குநர் தனுஷ், முதலில் ரகுமானிடம் பேசும்போது, நான் இப்போது 30 படங்களுக்கு இசை அமைத்து வருகின்றேன். இதனால் ராயன் படத்திற்கு இசை அமைப்பது என்பது மிகவும் கடினம். ஆனாலும் ஒத்துக்கொள்கின்றேன் எனக் கூறியதாக கூறினார்.
போட்டி போட்டு பாடிய அசுரன்கள்: மேலும் இசைவெளியீட்டு விழா மேடையில், படத்தின் இசை அமைப்பாளர் ரகுமானும் படத்தின் நடிகர் மற்றும் இயக்குநர் தனுஷ் இணைந்து அடங்காத அசுரன் பாடலைப் பாடினர். குறிப்பாக இருவரும் மாறி மாறி போட்டி போட்டு பாடினர். இது அங்கு கூடியிருந்த தனுஷ் ரசிகர்களுக்கும் ரகுமான் ரசிகர்களுக்கும் விருந்தாகவே அமைந்தது. தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகின்றது. இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் இசை அசுரனுடன் போட்டி போட்டுப் பாடும் நடிப்பு அசுரன் என கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











