உசுரே நீதான் என ரசிகர்களை நோக்கி கை நீட்டிய இசைப்புயல் ஏ.ஆர்! வீடியோ கண்ணுல ஒத்திக்கிற மாதிரி இருக்கே
சென்னை: தனுஷின் 50வது படமான ராயன் படத்தை தானே இயக்கி நடிக்கவும் செய்திருந்தார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 6ஆம் தேதி சென்னையில் பிராமாண்டமாக நடைபெற்றது. படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர் படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இசை வெளியீட்டு விழாவின் போது படத்தில் இருந்து வெளியிடப்பட்ட முதல் பாடலான அடங்காத அசுரன் பாடலை ரகுமான் மற்றும் தனுஷ் இருவரும் மேடையில் பாடினர்.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ராயன் படம் தனுஷின் 50வது படம். தனது 50வது படம் என்பதால் தனுஷே இந்தப் படத்திற்கான கதையை எழுதி இயக்கியும் உள்ளார். இந்த படத்தில் இயக்குநர்கள் செல்வராகவன், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் துஷாரா விஜயன், வரலஷ்மி சரத்குமார், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன் என பல்வேறு நட்சத்திரங்களும் படத்தில் நடித்துள்ளனர். தனுஷின் 50வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ராயன் படம் வரும் 26ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகின்றது.

பாடல்கள்: படத்தின் முதல் பாடல் என வெளியிடப்பட்ட அடங்காத அசுரன் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த பாடலை தனுஷ் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானுடன் இணைந்து பாடியுள்ளார். இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தில் இடம் பெற்றுள்ள மொத்தம் 5 பாடல்களும் பாடப்பட்டது. படக்குழு சார்பாக இசை வெளியீட்டு விழாவுக்கு முன்னரே மூன்று பாடல்கள் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த மூன்று பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் மெகா ஹிட் பாடல்களாக அமைந்தது.

ஏ.ஆர். ரகுமான்: மேலும் இசைவெளியீட்டு விழா மேடையில், படத்தின் இசை அமைப்பாளர் ரகுமானும் படத்தின் நடிகர் மற்றும் இயக்குநர் தனுஷ் இணைந்து அடங்காத அசுரன் பாடலைப் பாடினர். குறிப்பாக இருவரும் மாறி மாறி போட்டி போட்டு பாடினர்.

இது அங்கு கூடியிருந்த தனுஷ் ரசிகர்களுக்கும் ரகுமான் ரசிகர்களுக்கும் விருந்தாகவே அமைந்தது. தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகின்றது. குறிப்பாக ஏ.ஆர். ரகுமான் பாடலில் இடம்பெற்றுள்ள வரிகளான "உசுரே நீ....தானே நீ தானே" வரிகளைத் தான் பாடும்போது ரசிகர்களை நோக்கி கை நீட்டினார். இதை பார்த்த ரசிகரகள் ஆரவாரம் செய்தனர்.
அடங்காத அசுரன்: அப்போது ரகுமானுக்கு அருகில் நின்று கொண்டு இருந்த தனுஷும் அவ்வாறே செய்தார். மேலும் ரசிகர்களாகிய நீங்கள்தான் என் இதயம் எனக் கூறுவதைப் போல் சைகை காட்டினார். மேலும் பாடலில் "அடங்காத அசுரன்" வரிகளைப் பாடும்போது தனுஷை நோக்கி கை நீட்டினார். இதுதொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.


Click it and Unblock the Notifications











