Idli Kadai Twitter Review: பிரமாதமா இருக்கு.. ரசிகர்கள் கொண்டாடுறாங்கப்பா.. இட்லி கடை டிவிட்டர் விமர்சனம்!

சென்னை: தனுஷ் இயக்கி, தயாரித்து, நடித்து, பாடல்கள் எழுதி, பாடல்கள் பாடி உருவாக்கி உள்ள படம் இட்லி கடை. இந்த படம் இன்று அதாவது அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகி உள்ளது. படத்தில் தனுஷ் உடன் நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், சமுத்திரக்கனி, பார்த்திபன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். இந்த படத்தை பார்த்த இணையவாசிகள் படம் எப்படி உள்ளது என்பது குறித்து பதிவிட்டுள்ளார்கள். இது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

Dhanush Arun Vijay Idli Kadai Twitter Review Goes Trending Movie Gets Good Reviews

ரசிகர் ஒருவர் பதிவிடும்போது, " படத்தின் மிகப்பெரிய பலமாக வன்முறை இல்லாததும் கிராமத்துக் கதையும் தான். பெற்றோர்களை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று படத்தில் சொல்கிறார் தனுஷ். ஒரு நடிகராகவும் இயக்குநராகவும் தனுஷ்க்கு இது வெற்றிப் படமாக அமையும். சிவனேசன் இட்லி கடையில் இருந்து முருகன் இட்லி கடை என்பதில்தான் கதையே உள்ளது. எல்லோரும் பார்க்க வேண்டிய படம். கிளைமேக்ஸ்க்கு முன்னதாக தனுஷ் இரண்டு நிமிடங்கள் பேசும் காட்சி உள்ளது. அதை அவர் தனது சொந்த வாழ்க்கையில் இருந்து பேசி உள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு ரசிகர், " படம் பக்காவான பேமிலி எண்டர்டெயினர். ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரமும் மிகவும் பார்த்து பார்த்து உருவாக்கப்பட்டுள்ளது என்பது திரையில் தெரிகிறது. நல்ல பொழுதுபோக்கு படம். படக்குழு சொன்னது போலவே படம் உள்ளது. படத்தில் எமோஷன்ஸ் மிகவும் நன்றாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு இணைய வாசி பதிவிடும்போது, " படத்தின் கதை மிகவும் எளிமையான கதை. அதே நேரத்தில் நேர்த்தியான திரைக்கதையால் படம், நன்றாக உள்ளது. குடும்பத்துடன் பார்க்க பக்கவான படம். தியேட்டரில் மிஸ் பண்ணீடாதீங்க" என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகரோ, " எதார்த்தமும் உண்மையும் நிறைந்து இருக்கு. ஐயா சாமி ஜி.வி. பிரகாஷ் உன்னோட இசையிலையே எங்கள அழுக வெச்சுட்டீங்க. டிக்கட்டை புக் பண்ணுங்க மக்களே" என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் ரசிகர் ஒருவர், " தனுஷ் முருகன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். முருகன் இட்லி கடை தான் படத்தின் ஆத்மாவே. படத்தின் இரண்டாம் பாதியில் வரும் கழுகுக் காட்சி கட்டாயம் புல்லரிக்க வைக்கும். கிராமத்துக் கதை, அதன் கலாச்சாரம் மற்றும் பெற்றோர்கள் என படம் மிகவும் சிறப்பாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார். ரசிகர்களின் இந்த விமர்சனம் படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. படம் கிராமத்து ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றும் பலரும் தெரிவித்து வருகிறார்கள். இது அனைத்தும் பாக்ஸ் ஆபிஸில் எதிரொலிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X