எல்லார் உடனும் படம் பண்ற என்கூட பண்ண மாட்டியா நீ... நித்யா மேனனிடம் கேட்ட தனுஷ்

சென்னை: நடிகர் தனுஷ் மற்றும் நடிகைகள் நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் திருச்சிற்றம்பலம்.

Recommended Video

Thiruchitrambalam Movie Review | Yessa ? Bussa ? | திருச்சிற்றம்பலம் | Dhanush|*Review

மூன்று கதாநாயகிகளுமே முதன்முறையாக தனுஷுடன் இந்த படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை நித்யா மேனன் இந்தப் படம் தொடர்பான சுவாரசியமான பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

11- 11- 11

11- 11- 11

நித்யா மேனன் தமிழில் முதன் முதலில் நடித்த வெப்பம் திரைப்படம் வெளியான ஆண்டு 2011. இப்போது அவர்கள் நடிக்க வந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த 11 ஆண்டுகளில் 11 தமிழ் படங்கள் நித்யா மேனன் நடித்திருக்கிறாராம். படங்களை குறைவாக தேர்வு செய்வதற்கான காரணம் என்னவென்று அவரிடம் கேட்கப்பட்டபோது, தான் ஒரு கதாநாயகி கிடையாது. தான் ஒரு நடிகை.நடிப்பதற்கு வாய்ப்பு இருந்தால்தான் படங்களை ஒப்புக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இரு துருவம்

இரு துருவம்

கடந்த 2015 ஆம் ஆண்டு அவரது நடிப்பில் இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியானது. இரண்டும் முற்றிலும் தொடர்பில்லாத வெவ்வேறு ஜானகர்கள். ஒன்று இளமை ததும்பும் ஓகே கண்மணி மற்றொன்று திகில் ஜானரில் வெளிவந்த காஞ்சனா 2. ஓகே கண்மணி கதையைப் படித்தவுடன் அதில் இருக்கும் தாரா கதாபாத்திரம் தன்னுடைய கதாபாத்திரத்தை அப்படியே பிரதிபலித்ததால் அதில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று ஒப்புக் கொண்டேன். காஞ்சனா 2 கதையை லாரன்ஸ் மாஸ்டர் கூறியபோது அவர் அந்தக் கதாபாத்திரத்தை நடித்து காட்டினார். அது தனக்கு சம்பந்தமே இல்லாத ஒரு கதாபாத்திரம். அதனால் அதனையும் செய்ய வேண்டும் என்றுதான் அந்த இரு படங்களிலும் நடித்தேன் என்றார்.

நிருபர் நித்யா

நிருபர் நித்யா

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் ஜர்னலிசம் படித்து முடித்தவராம் நித்யா. வேலை வெட்டி இல்லாதவர்கள் தான் சினிமாவில் நடிப்பார்கள் என்ற அபிப்பிராயம் கொண்ட குடும்பப் பின்னணியில்தான் நித்யா வளர்ந்துள்ளார். பெரும்பாலும் படங்கள் பார்க்க மாட்டாராம். அவ்வளவு என் நடிகையான பின்பு கூட தன்னுடைய படங்களையே திரையரங்குகளில் பார்ப்பது அரிது என்று கூறியுள்ளார். வெளியிலிருந்து திரைத்துறையை பார்த்ததற்கும் இப்போது நடிகையாக பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இதிலும் பல சிரமங்கள் இருக்கிறது. ஜாலியாக ஃபன் செய்துகொண்டு நடிப்புத் தொழிலில் எவரும் இருக்க முடியாது என்று நித்யா கூறியிருக்கிறார்.

நண்பர் தனுஷ்

நண்பர் தனுஷ்

தன் முதலில் தனுஷ் இந்தப் படத்திற்காக தன்னை அனுகியபோது, இதில் ஒரு கதாபாத்திரம் எழுதியுள்ளேன். அதில் உன் முகம் மட்டும்தான் தெரிகிறது. நீ நடிக்கிறாய் என்றால் இதனை எடுப்பேன். இல்லை என்றால் எடுக்க மாட்டேன் யோசித்து உன் முடிவை கூறு என்று சொன்னாராம். அது மட்டுமின்றி தமிழில் எல்லோருடனும் படம் நடிக்கிறாய் என்னுடன் ஏன் இன்னும் நடிக்கவில்லை என்று உரிமையோடு தன்னிடம் தனுஷ் கோபித்துக் கொண்டதாக நித்யா மேனன் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X