Captain Miller - அப்பா பெயரை காப்பாத்துங்கப்பா.. ரஜினி மகள்களை சாடிய தனுஷ்?.. அய்யோ இது என்ன புது பஞ்சாயத்து
சென்னை: தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கிறது கேப்டன் மில்லர் திரைப்படம். அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்கியிருக்கிறார். பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 12ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட் ஆகும் என்ற நம்பிக்கை தனுஷுக்கும், அவரது ரசிகர்களுக்கும் இருக்கிறது.
தியாகராஜா குமாரராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் அருண் மாதேஸ்வரன். இவர் ராக்கி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனையடுத்து சாணிக்காயிதம் படத்தை இயக்கினார். இரண்டு படங்களும் வணிக ரீதியாக சரியாக போகவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன. முக்கியமாக அருண் மாதேஸ்வரன் இந்தத் தலைமுறையின் நம்பிக்கையான இயக்குநர்கள் பட்டியலில் கண்டிப்பாக இருப்பார் என்றும் திரை ஆர்வலர்கள் கூற ஆரம்பித்தனர்.

கேப்டன் மில்லர்: அவர் மூன்றாவது படமாக தனுஷை வைத்து கேப்டன் மில்லர் படத்தை இயக்கியிருக்கிறார். இதில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். தனுஷும் - அருண் மாதேஸ்வரனும் முதன்முறையாக இணைந்திருப்பதால் கண்டிப்பாக இப்படம் ஹிட்டாகும் என்ற எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகரித்திருக்கிறது. படமனாது பீரியட் ஜானரில் உருவாகியிருக்கிறது. படத்தின் ட்ரெய்லரும் நல்ல வரவேற்பையே பெற்றது.
என்ன கதைக்களம்: இந்தத் திரைப்படம் ஈழ போராட்டத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் ரசிகர்களிடையே இருக்கிறது. ஏனெனில் ஈழ போராட்டத்தில் மில்லர் என்பவர் உண்மையிலேயே வாழ்ந்தவர் என்பது கவனிக்கத்தக்கது. படமானது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனுடன் அயலானும் போட்டிக்கு வந்தாலும் இப்படம் மீதுதான் எதிர்பார்ப்பு அதிக அளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இசை வெளியீட்டு விழா: குறிப்பாக தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான வாத்தி படம் அவரை வாரிவிட்டது. எனவே இப்படம் வெற்றி பெற வேண்டும் கட்டாயத்தில் இருக்கிறார் தனுஷ். சூழல் இப்படி இருக்க படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். தனுஷ் பேச்சில் வழக்கம் போல பல அர்த்தங்கள் பொதிந்திருந்தன.
ஐஸ்வர்யாவை சாடிய தனுஷ்?: அவர் பேசும்போது ஒரு இடத்தில் சிவராஜ்குமாரை பார்த்து, 'அப்பா பெயரை காப்பாற்றுவது அவ்வளவு ஒன்றும் எளிதான காரியம் இல்லை. உங்களை பார்த்துதான் அதை கற்றுக்கொள்ள வேண்டும். எனது இரண்டு மகன்களும் இங்குதான் இருக்கிறார்கள்.அவர்களும் உங்களை பார்த்து நிச்சயம் கற்றுக்கொள்வார்கள்' என்று பேசினார்.
இதனை பார்த்த ரசிகர்கள் தனுஷ் இதன் மூலம் ஐஸ்வர்யாவையும், சௌந்தர்யாவையும்தான் சாடியிருக்கிறார் என்கின்றனர். அதாவது கோச்சடையான் படத்தின் மூலம் ரஜினிக்கு அவரது இளைய மகள் சௌந்தர்யா சங்கடத்தை கொடுத்துவிட்டார். அதேபோல் லால் சலாம் படத்தை பார்த்தும் தனது மூத்த மகள் ஐஸ்வர்யா மீது ரஜினிகாந்த் மன வருத்தத்தில் இருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகின.
சூழல் இப்படி இருக்க தனுஷ் மறைமுகமாக அவர்களைத்தான் சொல்கிறார்கள். அதாவது ரஜினிகாந்த்தின் பெயரை அவரது இரண்டு மகள்களும் திரைப்படம் எடுக்கிறேன் என்கிற பெயரில் கெடுத்துவிட்டார்கள் என்று தனுஷ் இந்தப் பேச்சின் மூலம் சொல்ல வருகிறாரா என கேள்வி எழுப்புகிறார்கள் ரசிகர்கள். அதேபோல் தனது மகன்களிடமும் உங்கள் சித்தி, அம்மா போன்று அப்பா பெயரை கெடுத்துவிடாதீர்கள். பார்த்து நடந்துகொள்ளுங்கள் என்று மறைமுகமாக உணர்த்தியிருக்கிறார் என்றும் கமெண்ட்ஸ்களை பார்க்க முடிகிறது. முன்னதாக தனுஷும், ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ஆனால் இப்போது இருவருக்கும் ஏற்பட்ட மன வருத்தத்தால் இரண்டு பேரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











