அவன் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான்.. ஐஸ்வர்யாவை அட்டாக் செய்கிறாரா தனுஷ்?.. ரசிகர்கள் கேள்வி
சென்னை: தனுஷ் நடிப்பில் அடுத்ததாக தேரே இஷ்க் மெய்ன், இட்லி கடை, குபேரா உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன. இந்த மூன்று படங்களின் மீதும் அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் தங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு கால்ஷீட் தராமால் இழுத்தடிக்கிறார் என்று ஃபைவ் ஸ்டார் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து தனுஷ் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்று ரசிகர்களிடம் ட்ரெண்டாகியிருக்கிறது.
தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான ராயன், கேப்டன் மில்லர் ஆகிய படங்களும், இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படமும் படுதோல்வியை சந்தித்தன. அவர் ஹிட் படம் கொடுத்து சில வருடங்கள் ஆகிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் கேப்டன் மில்லர் திரைப்படம் சிவகார்த்திகேயனின் அயலானிடம் தோல்வியை சந்தித்தது. அது கொஞ்சம் அப்செட்டை கொடுத்துவிட்டதாகவும்; அந்த அப்செட் ராயன் படத்தில் மேற்கொண்டு அதிகரித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
அடுத்த படங்கள்: படங்கள் தோல்வியடைந்தாலும் இப்போதைய தேதிக்கு கைகளில் அதிக படங்கள் வைத்திருக்கும் ஹீரோ என்றால் அவர் தனுஷ்தான். அவர் குபேரா, இட்லி கடை ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இவற்றில் இட்லி கடை திரைப்படத்தை அவரே இயக்கியிருக்கிறார். முதலில் அந்தப் படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போயிருக்கிறது. இந்தப் படங்கள் தவிர்த்து அவரது கைவசம் தேரே இஷ்க் மெய்ன், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், இளையராஜா பயோபிக், தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் ஒரு படம், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம் பல படங்களை வைத்திருக்கிறார் அவர்.
பிரச்னைகள்: இதற்கிடையே தனுஷுக்கு பெர்சனல் வாழ்க்கையில் பிரச்னை ஏற்பட்டது. அதாவது அவரும் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் திருமணம் செய்துகொண்டு நன்றாகத்தான் வாழ்ந்துவந்தார்கள். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை சில வருடங்களுக்கு முன்பு தாங்கள் பிரிவதாக அறிவித்தார்கள். அதனையடுத்து சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்தும் பெற்றுவிட்டார்கள். இதன் காரணமாக தனுஷின் ரசிகர்கள் பெரிய அதிர்ச்சி அடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த பஞ்சாயத்து: பெர்சனல் வாழ்க்கையில்தான் பிரச்னை என்றால் அவரது சினிமா வாழ்க்கையிலும் பிரச்னைகள் வளர ஆரம்பித்துவிட்டன. முதலில் நடிகை நயன்தாராவுடன் மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கும் சூழலில்; இன்னொரு பஞ்சாயத்தும் முளைக்க ஆரம்பித்திருக்கிறது. அதாவது தனுஷ் தங்களுக்கு கால்ஷீட் தருவதாக கூறி அட்வான்ஸ் தொகையை வாங்கினார். ஆனால் இன்றுவரை எங்களுக்கு எந்த தேதியையும் ஒதுக்கவில்லை என்று ஃபைவ் ஸ்டார் தயாரிப்பு தரப்பிலிருந்து புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த விவகாரத்தில் சுமூகமான முடிவை எட்டுவதற்கு முயற்சிகளை முன்னெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
தனுஷின் பதிவு: இப்படி தனுஷை சுற்றி பஞ்சாயத்துகள் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில்; அவர் தனது இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கும் பதிவு ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது தனுஷின் பேக் க்ரவுண்டில் சிவன் புகைப்படம் இருக்கிறது. அதனை பகிர்ந்த அவர், 'சிவன் எப்போதும் பார்த்துக்கொண்டே இருக்கிறார்' என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்களோ இந்தப் பதிவை அவர் யாருக்காக போட்டிருக்கிறார். தயாரிப்பாளர்கள் சங்க விவகாரத்துக்கா இல்லை தனது முன்னாள் மனைவி ஐஸ்வர்யாவை தாக்கி போட்டிருக்கிறாரா என்று கேள்விகளை எழுப்ப தொடங்கியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











