“நீதி சூரியனை போல முளைத்தெழக்கூடியது”.. தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு கர்ணன் டைட்டில் லுக் ரிலீஸ்!
சென்னை: நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு கர்ணன் படக்குழு டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
தனுஷின் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரசிகர்கள், பிரபலங்கள் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார் தனுஷ்.
முன்னதாக ஜகமே தந்திரம் படக்குழு 'ரகிட ரகிட ரகிட' பாடலை தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

கர்ணன் டைட்டில் லுக்
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன், லால் நடிப்பில் உருவாகி வரும் கர்ணன் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. நடிகர் தனுஷின் 37வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுக்கும் விதமாக இந்த டைட்டில் லுக்கை கர்ணன் படக்குழு வெளியிட்டு இருக்கிறது.

நீதி சூரியனை போல
பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். தனது முதல் படத்திலேயே, தனது இயக்க திறமையை காட்டிய அவர், அடுத்ததாக, தற்போது நடிகர் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கி வருகிறார். டைட்டில் லுக்குடன் படத்தின் மையக் கருவான "நீதி சூரியனை போல முளைத்தெழக்கூடியது" என்ற கேப்ஷனையும் கொடுத்துள்ளார்.

யானை
நீண்ட வாளை பல கைகள் கைப்பற்றுவது போல பல உள் அர்த்தங்களுடன் இந்த டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. மேலும், கர்ணன் டைட்டில் லுக்கிற்கு முன்பும் பின்புமாக யானை எமோஜிக்களை படக்குழு பதிவிட்டு இருக்கிறது. கர்ணன் படத்தில் யானைக்கு மிகப்பெரிய பங்கு உள்ளதாம். யானை மீது தனுஷ் ஏறி சவாரி செய்யும் புகைப்படங்களும் கசிந்துள்ளன.

டிரெண்டிங்
காலை முதலே ஜகமே தந்திரம், அசுரன், ஹேப்பி பர்த்டே தனுஷ் உள்ளிட்ட ஹாஷ்டேக்குகள் டிரெண்டிங்கில் இருந்து வருகின்றன. இந்நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் டைட்டில் லுக்கை அடுத்து, #Karnan என்ற ஹாஷ்டேக்கை தனுஷ் ரசிகர்கள் டிரெண்ட் செய்து இந்த 37வது பிறந்தநாளை வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர்.

மேக்கிங் வீடியோ
"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தனுஷ் தம்பி" என தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய கர்ணன் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, இன்று மாலை 5.55 மணிக்கு தனது யூடியூப் சேனலில், கர்ணன் மேக்கிங் வீடியோவையும் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ அப்டேட்டை கொடுத்து தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார். இன்னைக்கு ஃபுல்லா சம்பவம் தான் போல!


Click it and Unblock the Notifications











