Don't Miss!
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- News இது டூ மச்.. விஜய் யாருக்கு ஓட்டுப் போடுகிறார் என்று போட்டோ எடுத்த போலீஸ்காரர்! நடவடிக்கை பாயுமா?
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
நடிகர் தனுஷுக்கு பிறந்தநாள்.. விதவிதமாக ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்ஸ்.. திரை பிரபலங்கள் வாழ்த்து!
சென்னை: நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு டிவிட்டரில் விதவிதமான ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட்டாகி வருகின்றன. பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video
தமிழ் சினிமாவுக்கு துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தனுஷ். சினிமா குடும்பத்தை சேர்ந்த தனுஷ் இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தனது தனித்துவமான நடிப்பாலும் சிறந்த கதை தேர்வாலும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார் தனுஷ். இந்நிலையில் நடிகர் தனுஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
கொரோனா பிரச்னை முடிஞ்சிருமா? தனுஷ், அக்ஷய், சாரா நடிக்கும் பட ஷூட்டிங்.. இயக்குனர் புது தகவல்!
ஹேஷ்டேக்
இதனை முன்னிட்டு அவருக்கு திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனால்
#HappyBirthdayDhanush, #JagameThandhiram, #Rakitaரகிடరకిట, #Asuran ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன.
பூனம் பாஜ்வா
நடிகை பூனம் பாஜ்வா தனுஷுக்கு டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் பிறந்த நாள் வாழ்த்துகள் தனுஷ், ரோமியோ ஜூலியட் நிகழ்ச்சியில் பல அழகான நினைவுகள் உள்ளது. வரும் ஆண்டுகள் மகிழ்ச்சியானதாகவும் ஜகமே தந்திரம் மற்றும் வரபோகும் அனைத்து படங்களும் பெரும் வெற்றி பெற வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
நடிகை ஷ்ரேயா
நடிகை ஷ்ரேயா தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் பிறந்த நாள் வாழ்த்துகள் தனுஷ், கடவுள் உங்களை நிறைய மகிழ்ச்சி, வெற்றி மற்றும் அதிக சக்தியுடன் ஆசீர்வதிப்பார். ஒரு அற்புதமான நாள் மற்றும் ஆண்டு அமைய வாழ்த்துக்கள்.. ஜகமேதந்திரம் மற்றும் கர்ணனுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
நடிகை சாக்ஷி அகர்வால்
நடிகை சாக்ஷி அகர்வால் பதிவிட்டுள்ள டிவிட்டில் மிகவும் திறமையான நடிகருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் & அவரது நடிப்பை நான் எப்போதும் போற்றுகிறேன்.. ஒரு உண்மையான உத்வேகம் என தெரிவித்துள்ளார்.
நடிகை மதுமிதா
நடிகை மதுமிதா பதிவிட்டுள்ள டிவிட்டில் பிறந்தநாள் வாழ்த்துகள் தனுஷ் சார். தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியில் பல திறமைகளை கொண்ட நபர்..
கடவுள் உங்களை மேலும் மேலும் ஆசீர்வதிப்பார். உங்கள் அனைத்து நடவடிக்கைகளுக்கும் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
காயத்ரி ரகுராம்
நடிகை காயத்ரி ரகுராமும் நடிகர் தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சிறந்த நடிகர் மற்றும் பல திறமைகளை கொண்ட கலைஞரான உங்களை கடவுள் ஆசிர்வதிப்பார் நான் உங்களின் பெரிய ரசிகை என தெரிவித்துள்ளார்.